காணாததால், உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நாராயணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நரசிங்கம்பட்டி கிராமமே வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. வாக்காளர்களின் ரேசன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் நரசிங்கம்பட்டி கிராமத்தின் பெயரில் உள்ள நிலையில், வாக்குகள் மட்டும் கோட்டைமேடு, நாராயணபுரம், முத்தாலங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் பட்டியலில் மாறி இடம்பெற்றுள்ளது. இதைக் கண்டித்து, 30ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, நரசிங்கம்பட்டி கிராமத்தினர் நோட்டீஸ் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இதேபோல், அடிப்படை வசதியின்றி தவித்து வருவதால், உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கனவாய்பட்டி பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கனவாய்பட்டி 6வது வார்டு பகுதி மக்கள், குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு வசதி என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறுகின்றனர். அடிப்படை வசதிகள் கேட்டு பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் விரக்தியடைந்த அவர்கள், தேர்தல் புறக்கணிப்பு மனுவை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கியுள்ளனர்.
credit ns7.tv