வெள்ளி, 27 டிசம்பர், 2019

மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி...!

Image
தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட வேண்டிய அவசியம் என்ன என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், தேசிய மக்கள் தொகைப் பதிவேடும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என குறிப்பிட்டுள்ளார். 
குடியுரிமை சட்டத் திருத்தம் 2019ன் தாக்கம் காரணமாக, அனைத்து மதங்களுக்கு இடையேயும் வேற்றுமையையும், பாகுபாட்டு உணர்வுக்கான சூழலையும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு உருவாக்கும் என்ற கவலை எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 
தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்காக 4 ஆயிரம் கோடியை செலவிட வேண்டிய அவசியம் என்ன என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.  

credit ns7.tv