சனி, 11 ஜனவரி, 2020

உலகின் 10 வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்!

அண்மையில் வெளியான உலகின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. 
Economist Intelligence Unit (EIU) என்ற அமைப்பு உலகின் 10 வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலானது 2015 மற்றும் 2020 ஆண்டுகளுக்கிடையிலான காலகட்டத்தில் அடைந்துள்ள வளர்ச்சியை கணக்கிட்டு அதன் அடிப்படையில் வெளியிடப்பட்டதாகும்.
இப்பட்டியலில் இந்தியாவின் இயற்கைவளம் நிறைந்த கேரள மாநிலத்தின் மலப்புரம் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. 44.1% வளர்ச்சியை அந்நகரம் சந்தித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

kerala
மூன்றுமே கேரளாவில்:
இப்பட்டியலில் கேரளாவின் கோழிக்கோடு (34.5%) 4ம் இடத்தையும், கொல்லம் (31.1%) 10ம் இடத்தையும் பெற்றுள்ளன. உலகின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பாட்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்தியாவைச் சேர்ந்த 3 நகரங்களுமே கேரள மாநிலத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலுடன் டாப்-30 நகரங்களுக்கான பட்டியலும் வெளியானது. இதில் இந்தியாவில் உள்ள மேலும் இரண்டு நகரங்கள் இடம்பிடித்துள்ளன. 
13வது இடத்தை கேரளாவைச் சேர்ந்த திருச்சூர் பிடித்துள்ளது.
திருப்பூர்:
பின்னலாடை தொழிலில் கொடிகட்டிப்பறக்கும் தமிழகத்தின் திருப்பூர் நகரம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் வரிசையில் 30வது இடம் பிடித்துள்ளது. இதே போல குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் 26வது இடத்தை பிடித்துள்ளது

credit ns7.tv