மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Operating System) மென்பொருள் வருகின்ற 14ம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கணிணி மற்றும் மடிக்கணிணி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ்7யையே பயன்படுத்துகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு விண்டோஸ்10 என்ற மென்பொருள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லை என்ற காரணத்தால் இன்று வரை பல பயனீட்டாளர்கள் விண்டோஸ்7 மென்பொருளையே அதிகம் பயன்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் விண்டோஸ் 10 மென்பொருளை மேம்படுத்துவதற்காகவும், அதன் பயனீட்டாளர்களை அதிகப்படுத்துவதற்காகவும் விண்டோஸ்7 மென்பொருளின் பயன்பாட்டை முழுமையாக நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் விண்டோஸ்7 மென்பொருளில் இனிமேல் எந்த ஒரு மேம்படுத்துதலும் செய்யப்படாது எனவும், அதை பயன்படுத்தும்போது மென்பொருளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது சரி செய்யப்படாது எனவும் மைக்ரோசாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் விண்டோஸ்7-ன் ஒரிஜினல் மென்பொருளை பயன்படுத்துபவர்கள் இலவசமாகவே விண்டோஸ்10 மென்பொருளை அதன் இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
credit ns7.tv