சனி, 4 ஜனவரி, 2020

குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவை தனிமைப்படுத்தி விடும்: சிவசங்கர் மேனன்

Image
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகிய இரண்டும் இந்தியாவை தனிமைப்படுத்தி விடும் என தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் சிவசங்கர் மேனன் எச்சரித்துள்ளார். 
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவசங்கர் மேனன், சர்வதேச ஊடகங்களில் இந்தியா மீதான உலக பொதுக்கருத்து தற்போது மாறிவிட்டதாக குறிப்பிட்டார். 
ஜம்மு - காஷ்மீர்  சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை உட்பட, பல்வேறு தொடர் நடவடிக்கைகளின் விளைவால் தனிமைப்படுத்தப்படுவோம் என அவர் தெரிவித்தார். மேலும், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகிய இரண்டின் மீதான தனது கவலையை அவர் வெளிப்படுத்தினார். 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் சிவசங்கர் மேனனின் எச்சரிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
credit ns7.tv