பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லையில் கடந்த 29ம் தேதி எஸ்டிபிஐ சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், காவல் நிலையங்களிலும் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில், பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நெல்லை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, முழு உடல் பரிசோதனை செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட நெல்லை கண்ணன், அங்கு தகுந்த வசதிகள் இல்லை என்பதால், போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, நெல்லை கண்ணன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை, நெல்லை குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, நெல்லை கண்ணன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை, நெல்லை குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
credit ns7.tv