வெள்ளி, 10 ஜனவரி, 2020

வறுமையால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதை தடுக்க ஆந்திராவில் சிறப்பு திட்டம்...!

Image
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் குடும்பத்திற்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் வழங்கும் வழங்கும் புதிய திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். 
தாய்மடி திட்டம் என பொருள்படும் வகையில் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு 6456 கோடி ரூபாயை ஆந்திரா அரசு ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் சுமார் 82 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. 
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எவ்வித இடையூறும் இன்றி கல்வி கற்க வசதியாக ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தாய் மடி திட்டத்தில் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. 
News7 Tamil
அந்த பணம் பிள்ளைகளுடைய தாயின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார். ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்துவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த புதிய அறிவிப்பு, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த புதிய திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் இதனால், அவர்களது பெற்றோரும் பயனடைவர் என கூறப்படுகிறது. 

credit ns7.tv

Related Posts: