2020-03-04@ 20:56:37
டெல்லி: டெல்லி கலவரத்தால் இந்தியாவின் கவுரவமே பாதிக்கப்பட்டுவிட்டது என் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வாரம் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும், அதே இடத்தில் சட்டத்திற்கு ஆதரவாக போராட நடத்த வந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக வெடித்த நிலையில், வன்முறை சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே டெல்லி வன்முறை பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதனால் கடந்த 3 நாட்களாக அவை முடங்கியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வடகிழக்கு டெல்லியின் பிரிஜ்புரி பகுதியில் வன்முறையில் சேதமடைந்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் அடங்கிய குழுவும் அவருடன் சென்றது. டெல்லியில் வன்முறை நடந்த இடங்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; டெல்லி கலவரத்தால் இந்தியாவின் கவுரவமே பாதிக்கப்பட்டுவிட்டது. டெல்லியின் எதிர்காலமான பள்ளிகளை வெறுப்பும், வன்முறையும் அழித்துவிட்டன.
வன்முறைகளால் பாரத மாதாவுக்கு எந்தவிதப்பயனும் ஏற்படப்போவதில்லை. இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என கூறினார்.

credit dinakaran.com