இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கேரளாவில் 3 பேர், தெலங்கானா மற்றும் டெல்லியில் தலா ஒருவர் என 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு வந்த இத்தாலி நாட்டு சுற்றுலாப் பயணிகள் 16 பேருக்கும், அவர்களது வாகன ஓட்டியான இந்தியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் அதிகம் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ நிபுணர்கள் கூறி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
credit ns7.tv