செவ்வாய், 17 மார்ச், 2020

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

Image
இந்தியாவின் 46-வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் 2018-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பதவியேற்றார். இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற போவதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து நவம்பர் 17-ஆம் தேதி ஓய்வு பெற்ற இவர், ஓய்வு பெறுவதற்கு முன்பாக பல்வேறு முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பளித்தார். 

இவருடைய தலைமையிலான அமர்வு, அயோதி ராமர் கோயில் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தது. இந்நிலையில் ரஞ்சன் கோகாயை நியமன எம்பியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அறிவித்துள்ளார். காலியாக இருக்கும் ஒரு எம்பி பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.