புதன், 4 மார்ச், 2020

வாட்ஸ்ஆப்பில் உங்களின் ரகசிய சாட்களை பாதுகாப்பது எப்படி? அதில் பங்கேர்பாளர்களை சேர்ப்பது மற்றும் உறுப்பினர்களை இணைப்பின் மூலம் அழைக்கும் வசதி இருக்கும்.

whatsapp private chats tips to secure private groups  : அழைப்பு இணைப்புகள் (links) ஒரு சாதாரண கூகுள் தேடலின் மூலம் இணையத்தில் கிடைக்கின்றன என்ற விஷயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தெரியவந்தது. பயனர்கள் நினைப்பதைப் போல வாட்ஸ் ஆப்பில் உள்ள தனிப்பட்ட உரையாடல்கள் (WhatsApp private chat) பாதுகாப்பானது அல்ல என இதழியலாளர் Jordon Wildon தனது டிவிட்டர் கணக்கில் எழுதியதன் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரபலமான app reverse பொறியாளர் Jane Wong, கூகுளில் உள்ளீடு செய்யும் சில தேடல் வார்த்தைகள் சில private groups இணைப்புகளுக்கு வழிகாட்டும் படத்தை தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த private group chat இணைப்புகளின் அட்டவணை கூகுளில் தெரிந்ததன் காரணம் இந்த group களின் அழைப்பு இணைப்புகள் வாட்ஸ் ஆப்பின் encrypted platform ஐ தவிர்த்து வெளியில் உள்ள பொது தளத்தில் பகிரப்பட்டது தான் காரணம் என கூகுள் விளக்கமளித்தது.
இப்படி கூகுள் தேடல் மூலம் யாரோ ஒருவர் எதாவது ஒரு private Whatsapp group ல் சேர்ந்து அந்த குழுவில் உள்ள உறுப்பினர்களில் கைபேசி எண்ணை பார்க்க முடியும். வாட்ஸ் ஆப் ஒரு meta tag ஐ செயல்படுத்தி அதன்மூலம் இணைப்புகள் கூகுளில் பட்டியலிடப்படுவதை தடுத்தாலும், முன்பே ஏதாவது private Whatsapp group ன் இணைப்பை வைத்திருப்பவர் அந்த குழுவில் உள்ள உறுப்பினர்களை பாதிப்படைய செய்ய முடியும்.
உங்கள் தனிப்பட்ட குழு (private group) இணைப்பும் பாதிப்படைந்துள்ளதாக நீங்கள் கருதினால் கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து உங்கள் வாட்ஸ் ஆப் குழுவை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

இணைப்பை ரீசெட் செய்து கொள்ளுங்கள்

வாட்ஸ் ஆப் தற்போது ஒரு meta tag ஐ சேர்த்துள்ளதால் அது புதிய இணைப்புகள் பட்டியலிடப்படுவதை தடுக்கும். ஆனால் பழைய இணைப்பை யாராவது வைத்திருப்பார்களா இல்லையா என்பது தான் பயனாளர்களின் கவலை. இதற்கான தீர்வு மிகவும் எளிதானது. வாட்ஸ் ஆப் தனது group chat நிர்வாகிகளுக்கு (administrators) குழுவின் இணைப்பை ரீசெட் செய்யும் (resetting the link to the group) தேர்வை கொடுத்துள்ளது. இதை செய்யும் போது பழைய இணைப்பு காலாவதியாகிவிடும்.

எப்படி இணைப்பை ரீசெட் செய்வது

வாட்ஸ் ஆபில் எந்த குழுவின் இணைப்பை ரீசெட் செய்யவேண்டுமோ அதற்கு செல்லுங்கள்.
மேலே இருக்கும் குழுவின் பெயரில் (name of the group) சொடுக்கவும். இதன் மூலம் உங்களால் குழு தகவலை பார்க்க முடியும்.
குழுவில் உள்ள பங்கேர்பாளர்களின் பட்டியலுக்கு போகவும்
அதில் பங்கேர்பாளர்களை சேர்ப்பது மற்றும் உறுப்பினர்களை இணைப்பின் மூலம் அழைக்கும் வசதி இருக்கும்.
Invite via link என்பதை சொடுக்கவும்.
அங்கு ரீசெட் தேர்வு இருக்கும். அதை சொடுக்கவும்.
மேலும் குழுவின் நிர்வாகிகள் chat link ஐ பகிர்வதை முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும்.
credit indianexpress.com