வெள்ளி, 22 மே, 2020

இந்த கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெறுகிறது. இதில் பல்வேறு கட்சியினர் கலந்து கொள்ளும் நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 2 மாதகால இடைவெளிக்கு பிறகு, உள்நாட்டு விமானசேவை வரும் 25ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து விமான சேவை தொடங்கப்பட உள்ளதால், மூன்றில் ஒரு பங்கு அளவிற்கே விமானங்கள் இயக்கப்பட உள்ளன. உள்நாட்டு விமான சேவை துவங்கப்பட உள்ள நிலையில், விமான நிறுவனங்கள், பயணிகள், விமான நிலையங்கள் உள்ளிட்டோருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. விமானம் ஏறுவதற்கு முன்பு, விமானத்தினுள், மற்றும் விமான பயணத்திற்கு பிந்தைய நிலையில் பயணிகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் வழிகாட்டுதலின்படி, பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பயணிகளை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை, அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் துவங்கப்பட உள்ள நிலையில், இன்று ( மே 21ம் தேதி) முதல் அதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது.
எந்தெந்த நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன?
பயணிகளின் வருகையை பொறுத்து விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளன. பல்வேறு மாநிலங்களில் பொதுப்போக்குவரத்து இன்னும் முழுமையாக துவங்கப்படாத நிலையில், விமான நிலையத்திற்கு பயணிகள் எளிதாக வர போக்குவரத்து வசதிகள் உள்ள நகரங்களுக்கு விமான சேவைகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லி – மும்பை, டெல்லி – பெங்களூரு, மும்பை – பெங்களூரு, அகமாதாபாத் – மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு முதற்கட்டமாக விமான சேவைகள் துவங்கப்பட உள்ளன. விமானங்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட இருப்பதால், மத்திய விமானத்துறை அமைச்சகம் பரிந்துரைத்த அளவிலேயே விமான நிறுவனங்கள் பயண கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
.
விமான பயண நடைமுறையில் மாற்றமா?
பயணிகள், விமான பயணத்திற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாகவே, விமான நிலையத்திற்கு வந்துவிட வேண்டும். முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களது ஸ்மார்ட்போனில் ஆரோக்யே சேது செயலியை கண்டிப்பாக நிறுவியிருப்பதோடு, தங்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்பதை உறுதிசெய்திருத்தல் வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ரெட் ஜோன் பகுதியில் இருந்து வருபவர்கள் விமான பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விமானநிலையத்தின் உள் நுழைவதற்கு முன்பு, பயணிகள் தெர்மல் ஸ்கேனரின் உதவியால் சோதனை செய்யப்படுவார்கள். ஊழியர்களால் செய்யப்படும் சோதனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெப் செக்கிங் முறையிலேயே சோதனை செய்யப்பட்டு, பயணிகள் விமானநிலையத்தில் நுழைய அனுமதிக்கப்படுவர். லக்கேஜில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள டேக் வெளியே தெரியுமாறு பயணிகள் பார்த்துக்கொள்ள வேண்டும். குறைந்து அளவிலான லக்கேஜ்களை கொண்டு வருமாறும், டிராலி பேக்குகள் மட்டுமே அனுமதிக்கபட உள்ளது.
பயணிகள் கடைசிநேர தாமதத்தை தவிர்க்கும் நடவடிக்கைகளை விட்டொழித்து இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே, விமானநிலையத்தினுள் இருக்க விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
செக்யூரிட்டி செக் பிரிவில் மட்டும், பாதுகாப்புப்படை வீரர்கள், தகுந்த முன்னெச்சரிக்கை அம்சங்களுடன் பயணிகளை தொட்டு சோதனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
வயதானவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், உடல்நலக்குறைபாடு உள்ளவர்கள், விமான பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காத்திருப்பு அறையில் இருக்கும்போது போதிய தனிநபர் இடைவெளி மற்றும் சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும். காத்திருப்பு அறைகளில், மூடிக்கிடக்கும் சேர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவு. குளிர்பானங்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யும் கடைகள், விமானநிலையத்தின் உட்புறம் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தகுந்த சுகாதாரத்துடனும், தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
விமானத்தில் ஏறுவதற்கு முன் பயணிகள் போர்டிங் பாஸ் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும். போர்டிங் கேட்கள் அருகே பயணிகளுக்கு 3 அடுக்கு முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவை வழங்கப்படும். விமானத்தின் உள்ளே நுழைவதற்கு முன்பு, முக கவசம் அணிந்தும், சானிடைசரால் சுத்தப்படுத்தியும் கொள்ள வேண்டும்.
விமானத்தினுள் உணவு வகைகள் வழங்கப்பட மாட்டாது. பத்திரிகைகள், வார இதழ்கள் உள்ளிட்டவைகளின் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கழிப்பறை பயன்பாட்டை போதுமானவரை குறைத்துக்கொள்ள பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தண்ணீர் பாட்டில்கள், உணவு வகைகள் உள்ளிட்டவைகளை விமானத்தினுள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி. வாட்டர் பாட்டில்கள் விமான நிறுவனத்தினராலேயே வழங்கப்படும்.
பயணிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ , இருமல் ஏற்பட்டாலோ உடனடியாக விமான சிப்பந்திகளை தொடர்பு கொள்ள வேண்டும்.
விமானத்தில் உள்ள கழிப்பறையை ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒருமுறையும், ஒவ்வொரு விமான பயணத்திற்கு முன்னரும், இருக்கைகள், உள்ளிட்டவைகளை சுத்தப்படுத்த விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்து இறங்கியவுடன், லக்கேஜ் பகுதிக்கு பயணிகள் உடனடியாக விரைந்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, அங்குள்ள ஊழியர்கள் வரிசைக்கிரமாக பயணிகளை தகுந்த இடைவெளியில் அனுமதிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட வழியாகவே, பயணிகள் விமானநிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர்.
பயணிகள் விமான பயணம் செய்வதற்கு முன்னரே, அந்தந்த மாநிலங்களின் பரிந்துரையின்படி அவர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருத்தல் அவசியம். அப்போதுதான் அவர்கள் மற்ற நகரங்களுக்கு செல்லும்போது அவர்கள் தனிமைப்படுத்த வேண்டுமா அல்லது இல்லையா என்ற குழப்பம் அங்கு இருப்பவர்களுக்கு வருவதை தவிர்க்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
credit indianexpress.com