சனி, 23 மே, 2020

சலசலப்புகளுக்கு திமுக என்றும் அஞ்சாது - ஆர்.எஸ். பாரதி கைது பற்றி ஸ்டாலின்

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி  இன்று அதிகாலை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.  மூன்று மாதங்களுக்குப் முன்பு, ‘அன்பகம்’  உள்ளரங்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்தும், நீதிபதிகள் குறித்தும் ஆர்.எஸ் பாரதி பேசியது சர்ச்சையானது. ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் அளித்த புகாரின் பேரில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் ஆர்.எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜூன் ஒன்றாம் தேதி வரை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீனில் வெளிவந்த ஆர்.எஸ் பாராதி  சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நேரில் சந்தித்தார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிவிப்பில், ”  கொரோனா கால ஊழல்,  கொரோனா தோல்வி ஆகியவற்றை மூடி மறைக்க குறிப்பாக முதலமைச்சர் தனது ஊழலையும், நிர்வாகத் தோல்வியையும் திசை திருப்பும் எண்ணத்துடன், ஆர். எஸ். பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வர், துணை முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோர் மீது ஊழல் தடுப்புத் துறைக்கு பல்வேறு ஊழல் புகார்களை ஆர். எஸ். பாரதி அளித்தவர். மூன்று மாதங்களுக்குப் முன்பு, ‘அன்பகம்’  உள்ளரங்கத்தில் பேசியதாக ஒரு சர்ச்சையை எழுப்பி – அது தொடர்பாக ஆர்.எஸ் பாரதி விளக்க மளித்து – மனப்பூர்வமான வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், இன்று அதிகாலை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் முதலமைச்சார் எடப்பாடி பழனிச்சாமி ஆர். எஸ். பாரதியை கைது செய்திருக்கிறார்.
பட்டியிலன- பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும்- அவர்களின் சமத்துவ சமூக நீதிக்காகவும், காலம் காலமாக பாடுபட்டு வரும் தி.மு.கவின் பணிகளை, இதுபோன்ற அரை வேக்காட்டு, அதிகார துஷ்பிரயோகம் மூலம் – எடப்பாடி பலனிசாமியோ, அல்லது அவரை தூரத்தில் இருந்து இயக்கம் ரிங் மாஸ்டர்களோ களங்கம் கற்பித்து விடவோ, திசை திருப்பவோ முடியாது என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி:  இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த கனிமொழி தனது ட்விட்டரில், ” திமுக அமைப்பு செயல்லாளர் அண்ணன் ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிகின்றேன். கோவையில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் ரூ. 200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது பற்றி ஆர். எஸ். பாரதி புகார் அளித்திருந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற நடவடிக்கைகளால் திமுகவை அச்சுறுத்த நினைத்தால், அது நடக்காது” என்று பதிவு செய்துள்ளார்
credit indianexpresscom