வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆம்பன் புயல் நாளை மேற்கு வங்கம் மாநிலத்தில் கரையை கடக்கவுள்ளதால் அப்பகுதிகளில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வழுப்பெற்று புயலாக உருவெடுத்துள்ளது. நேற்று முந்தினம் அதிதீவிரப்புயலாக இருந்த ஆம்பன் புயல், நேற்று சூப்பர் புயலாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இந்த ஆம்பன் புயலானது மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில், கொல்கத்தாவில் இருந்து 690 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் மேலும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் மாநிலத்தில் 20.05.2020 மாலை அல்லது இரவு தீவிர புயலாக கரையை கடக்கவுள்ளது.