coronavirus second wave could be deadlier than today’s situation WHO sounds a warning : தற்போது எங்கெல்லாம் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக இருக்கிறதோ, அங்கெல்லாம் இந்த ஆண்டின் இறுதிக்குள் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் ஏற்படும் என்று அறிவித்துள்ளது உலக சுகாதார மையம்.
உலக சுகாதார மையத்தின் தலைவர் மைக் ரேயன் நேற்று நேரலையில் செய்தியாளர்களை சந்தித்த போது, “ஏராளமான நாடுகள், இன்னும் கொரோனா அலையின் முதல் தாக்கத்தில் இருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது என்று சோதனைகளையும், ஊரடங்கு நடவடிக்கைகளையும் தளர்த்தி இயல்பு நிலைக்கு திரும்பும் நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்கம் ஏற்படும் கூறியுள்ளார் அவர். மேலும் தற்போது மத்திய மற்றும் தென் அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஆஃபிரிக்கா ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸின் பரவல் குறைவாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு நாம் இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் கொரோனா மீண்டும் பரவலாம்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் பொது சுகாதாரம், சமூக இடைவெளி, தனிமனித இடைவெளி, சர்வைலன்ஸ் நடவடிக்கைகளை தளர்த்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள், கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு ஊரடங்கினை தளர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
credit indian express.com