செவ்வாய், 26 மே, 2020

தொழிலாளர்களை பிற மாநிலங்களில் பணிக்கு அழைக்கும் போது அரசின் அனுமதி பெற வேண்டும் - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை பிற மாநிலங்களில் பணிக்கு அழைக்கும் போது அரசின் அனுமதி பெற வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கின் காரணமாக பல மாநிலங்களில் தவித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இனிவரும் காலங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை பிற மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் வேலைக்கு அழைக்கும் போது, உத்தரப்பிரதேச மாநில அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் மோசமாக நடத்தப்படுவதை விரும்பவில்லை எனவும், அவர்கள் சொந்த மாநிலத்திலேயே வேலை வாய்ப்பை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.