செவ்வாய், 26 மே, 2020

சிபிசிஐடி இயக்குநராக இருந்த ஜாபர் சேட் பணியிட மாற்றம்!

credit ns7.tv
Image
சிபிசிஐடி இயக்குநராக இருந்த ஜாபர் சேட் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1986 ஆம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான ஜாபர் சேட் 1990 ஆம் ஆண்டு சென்னை கூடுதல் எஸ்.பி.ஆக பணியில் சேர்ந்தவர். தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பிக்கான ரேஸில் முதலிடத்தில் இருப்பவர். இவர் சிபிசிஐடி டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற பின்னர், நீட் தேர்வு முறைகேடு வழக்கு, சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போன வழக்கு, டி.என்.பி.எஸ்.சி வழக்கு, தி.மு.க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான நில அபகரிப்பு வழக்குகள் உள்ளிட்ட முக்கிய வழக்குகளை கையாண்டவர். 
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற அவர், கடந்த மார்ச் மாதம் சி.பி.சி.ஐ.டியில் பணியாற்றிய காவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் ஜாபர் சேட் குடிமைப் பொருள்வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
இந்தாண்டு டிசம்பர் மாதம் அவர் பணி ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிலைகடத்தல் தடுப்பு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்டவற்றில் ஏ. டி.ஜி.பி.யாக பணியாற்றி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றவர் பிரதீப் வி.பிலிப் தற்போது சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக மாற்றபட்டுள்ளார்.