சனி, 30 மே, 2020

கிருஷ்ணகிரி அருகே வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: அதிகாரிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி அருகே, வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து, வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

வடமாநில விவசாயிகளை கலங்கடிக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள், தமிழகத்திலும் நுழைந்துவிடுமோ என்ற அச்சம், விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்தில், வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருவதாக, பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் கூறுகையில்,  நேரலகிரி கிராமத்தில் உள்ள வெட்டுக்கிளிகள், வடமாநிலத்தில் இருந்த வந்த வெட்டுக்கிளிகள் இல்லை என விளக்கம் அளித்தனர். நீரில் வேப்ப எண்ணெய் கலந்து தெளிப்பதன் மூலம் இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.