புதன், 27 மே, 2020

லடாக் எல்லையில் சீன படைகள் குவிப்பு... முப்படைகளின் தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

லடாக் எல்லையில் சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். 

இந்திய-சீன எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் சமீபத்தில் மோதிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, இந்தியாவின் லடாக் எல்லையை ஒட்டி உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் சீன படைகள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் அங்கு படைகளை குவித்து வருகிறது.

கிழக்கு லடாக் எல்லையின் பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளும் படைகளைக் குவித்து வருவதால் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஆகியோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இதில், இந்திய- சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.