ஞாயிறு, 31 மே, 2020

9 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி!

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை நாளை முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரிக்கப்பட்டு வருகின்றன. 

பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை அடுத்து, தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை நாளை முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  5 வழக்கறிஞர்களை மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும், வழக்கு தொடர்ந்தவர்களை அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. 

நீதிமன்ற அறைகளில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு பின் இந்த நடைமுறை மறு ஆய்வு செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts:

  • சீனாவில் இருந்து பால், பால் பொருட்கள், சில செல்போன்கள் இறக்குமதி செய்ய தடை புது தில்லி : சீனாவில் இருந்து பால் மற்றும் பால் பொருட்கள், சில குறிப்பிட்ட வகை செல்போன்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.… Read More
  • Hadis: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு அதற்காக ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை என… Read More
  • எப்படி இருக்கணும் ரெஸ்யூம்? '' பணிக்கான உங்கள் தகுதி சரிபார்ப்பு, ரெஸ்யூமிலேயே ஆரம்பித்து விடுகிறது...'' என்கிறார் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் ஹெச். ஆர். ஆன ஆனந்த், ஒரு ரெஸ்ய… Read More
  • வாய் திறக்க மறுக்கும் தமிழ் ஊடகங்கள் முஸ்லீம்கள் அப்பாவிகள் என்று நீதிமன்றம் தீர்ப்புவாய் திறக்க மறுக்கும் தமிழ் ஊடகங்கள் … Read More
  • உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஸ்கீட் பிரிவில் இந்தியவீரர் மைராஜ் அகமது கான் முதல்முறையாக பதக்கத்தை பதிவு செய்து சாதனை படைத்து… Read More