தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆக 16,000-ஐ கடந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது.
பலி எண்ணிக்கை - 111
தமிழகத்தில் இன்று 8 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலிஎண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்கள் 6 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குணமடைவு எண்ணிக்கை - 8,324
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 833 பேர் இன்று
குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,324 ஆக அதிகரித்தது. தற்போது 7,839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,324 ஆக அதிகரித்தது. தற்போது 7,839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு - பாலின வாரியான விவரம்:
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான 16,277 பேரில், 10,340 பேர் ஆண்கள், 5,932 பேர் பெண்கள். மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 4,09,615 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 12,275 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு நிலவரம்:
சென்னையில் 587 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்:
சென்னை | 587 |
செங்கல்பட்டு | 46 |
காஞ்சிபுரம் | 21 |
கடலூர் | 3 |
கன்னியாகுமரி | 2 |
மதுரை | 6 |
புதுக்கோட்டை | 1 |
ராமநாதபுரம் | 3 |
ராணிப்பேட்டை | 2 |
தஞ்சாவூர் | 3 |
தேனி | 1 |
திருவள்ளூர் | 34 |
திருவாரூர் | 1 |
திருச்சி | 3 |
கடந்த 1ம் தேதியில் இருந்து தற்போது வரையிலான கொரோனா பாதிப்பு நிலவரம்:
மே 01 - 2526 மே 11 - 8002 மே 21 - 13967
மே 02 - 2757 மே 12 - 8718 மே 22 - 14753
மே 03 - 3023 மே 13 - 9227 மே 23 - 15,512
மே 04 - 3550 மே 14 - 9674 மே 24 - 16,277
மே 05 - 4058 மே 15 - 10108
மே 06 - 4829 மே 16 - 10585
மே 07 - 5409 மே 17 - 11224
மே 08 - 6009 மே 18 - 11760
மே 09 - 6535 மே 19 - 12448
மே 10 - 7204 மே 20 - 13191