credit ns7
கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுக்காக மணலூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு இன்று பணிகள் தொடங்குகின்றன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த ஐந்து கட்ட அகழாய்வில் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய உறைகிணறு, சுடுமண் குழாய், அரசு முத்திரை, பாசி மணிகள், பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்தநிலையில், 6ம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த பிப்ரவரி 19ம் தேதி தொடங்கியது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அகழாய்வு பணிகள் நடத்த திட்டமிட்ட நிலையில்,
மணலூரில் மட்டும் இடம் தேர்வு செய்வதில் இழுபறி நிலவியது.
மணலூரில் மட்டும் இடம் தேர்வு செய்வதில் இழுபறி நிலவியது.
இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதியுடன் நிறுத்தப்பட்ட 6ஆம் கட்ட அகழாய்வு, 56 நாட்கள் கழித்து மே 20ம் தேதி மீண்டும் தொடங்கியது. மணலூரில் யோகலட்சுமி என்பவரின் இரண்டு ஏக்கர் நிலத்தில் அகழாய்வு நடத்த திட்டமிடப்பட்டு, இடத்தை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி இன்று தொல்லியல் துறை ஊழியர்கள், தொல்லியல் துறை உதவி அலுவலர், ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் உள்ளிட்டோர் அகழாய்வில் ஈடுபட உள்ளனர்.