வியாழன், 28 மே, 2020

இந்த வருட வெப்ப அலை ஏன் வித்தியாசமானது?

வெப்ப அலை என்பது கோடை காலத்தில் இயல்பை விட வெப்பநிலை உயர்வதால் ஏற்படும் நிகழ்வாகும்.  குறிப்பாக வெப்ப அலை, வெயில் காலங்களான மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கிடையே ஏற்படுகிறது.

இருப்பினும், இந்த வருட வெப்ப அலை நிகழ்வு ஏன் வித்தியாசமானது என்பதை  இங்கே பார்க்கலாம்.

உலக வானிலை ஆய்வு அமைப்பானது தொடர்ச்சியாக 5 தினங்கள் அல்லது அதற்கு மேல் இயல்பு வெப்பநிலையை விட 5oC அதிகமாகும் போது வெப்ப அலை ஏற்படும் என வரையறை செய்துள்ளது.

சமவெளிகளில் 40oC அல்லது அதற்கு மேலாகவும் (4-5oC அதிகமாக), மலைப் பிரதேசங்களில் 30oC அல்லது அதற்கு மேலாகவும், கடலோர பகுதிகளில் 37oC அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும் போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்பஅலை நிகழ்வு ஏற்பட்டுவதாக வரையறை செய்துள்ளது.

ஒரு வெப்ப அலை நிகழ்வு எவ்வளவு காலம் நீடிக்கும்?

வெப்ப அலை நிகழ்வு குறைந்தபட்சம் நான்கு நாட்கள் நீடிக்கும். சில சந்தர்ப்பங்களில், ஏழு (அ) பத்து நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம். மிக நீண்ட வெப்ப அலை நிகழ்வு கடைசியாக 2015ம் ஆண்டு மே மாதம் 18 முதல் 31 வரை இருந்தது. ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தின் சில பகுதிகள் இதனால் கடுமையாக பாதித்தன. 2014 ஆம் ஆண்டில் இதேபோன்ற வெப்ப அலை நிகழ்வு ஜூன் 2 முதல்11 வரை இருந்தது.

 

இந்த ஆண்டு, இந்தியாவில் கடந்த மே- 22ம் தேதி,  வெப்ப அலை  நிகழ்வு தொடங்கியது. வரும் 29ம் தேதி வரை நிலவும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . பொதுவாக, மே மாதத்தில் உணரப்படும் வெப்பஅலை நிகழ்வு நீண்ட நாட்களுக்கு நீடிப்பதாகவும், ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் (தென்மேற்கு பருவ மழை காலம் துவங்கிவிடுவதால்) வெப்ப அலை நிகழ்வு கணிசமாகக் குறைந்த நாட்களில் காணப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வெப்பஅலை நிகழ்வு உணரப்படுகிறதா?

இல்லை. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிராவின் விதர்பா, கங்கை மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள், கடலோர ஆந்திரா போன்றவைகளை உயர் ஆபத்து வெப்பஅலை மண்டலங்களாக இந்திய வானிலை ஆய்வுத் துறையால் வகைப்படுத்தியுள்ளது.

நான்கு மாதங்களில் ( மார்ச் முதல் ஜூன் )இந்த மண்டலங்க்ளில் மட்டும் குறைந்தது ஆறு  நாட்களை வெப்பஅலை நிகழ்வு உணரப்படுவதாக பல சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இந்தியாவின்  வடமேற்கில் பகுதிகளிலும்,தென்கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள நகர்ப்பகுதிகளில் வெயில் காலத்தில் எட்டு நாட்கள் வரை வெப்பஅலை நிகழ்வை உணர்கின்றன. இருப்பினும், இந்தியாவின் அதீத வடக்கு, வடகிழக்கு, தென்மேற்கு பகுதிகளில் வெப்ப அலை நிகழ்வுகள்  குறைவாகவே உள்ளன.

இந்த வருட வெப்ப அலை ஏன் வித்தியாசமானது?

இந்தியாவைப் பொறுத்த வரையில் கோடை காலம் தனது உச்சத்தை மே 15 க்குள் எட்டுகிறது. அப்போது நாட்டின் வடக்கு, மேற்கு மற்றும் மத்திய சமவெளி பகுதிகளில் வெப்பநிலை    வெப்பநிலை 40 டிகிரியைக் கடந்து 45 டிகிரியாக உயர்கிறது.

இருப்பினும், வட இந்தியா இந்த ஆண்டு மே 21 வரை  இத்தகைய வெப்பநிலை நிகழ்வு காணவில்லை.

மேற்கத்திய இடையூறு காற்றின் தொடர்ச்சியான வருகை,   வட இந்தியாவின் வானிலையில் (கிட்டத்தட்ட, ஏப்ரல் மாத பிற்பகுதி வரை)  தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த குளிர்காலத்தில் இருந்து, ஒவ்வொரு ஐந்து முதல் ஏழு நாட்களுக்கும்  மேற்கத்திய இடையூறு காற்று இந்தியாவின் வாடா மாநிலங்களை நோக்கி நகர்ந்தன. மத்திய தரைக் கடலில் தாழ் அழுத்தம் உருவாகி இரான், ஆப்கானிஸ்தான் வழியே இந்த காற்று இந்தியா வந்தடைகிறது. இந்த வகையான காற்று ஹரியானா, இமாச்சலப் பிரேதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு பனிப்பொழிவு மற்றும் மழையைத்  தருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி-மார்ச் மாதங்களுக்கு இடையில், சுமார் 20 முறை மேற்கத்திய இடையூறு காற்றின் வருகை பதிவு செய்யப்பட்டன. பொதுவாக, இந்தியாவில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரைதான்  மேற்கத்திய இடையூறு காற்றின் ஆதிக்கம் உணரப்படும் . இருப்பினும், இந்த ஆண்டு அதன் தாக்கம் மே மாத தொடக்கம் வரை நீடித்தது.

 

வங்காள விரிகுடாவிலிருந்து வீசும் கீழைக் காற்றுகள் இந்த சமீபத்திய மேற்கத்திய மேற்கத்திய காற்றுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்தன. இதன் விளைவாக ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், வடக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் மே நடுப்பகுதி வரை மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தத. 2020 ஆம் ஆண்டில் அகில இந்திய சராசரி வெப்பநிலை இயல்பை விடக் குறைந்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவ்கின்றது.

உம்பன் சூறாவளி தற்போதைய வெப்ப அலை நிகழ்வை பாதித்ததா?

உம்பன் சூறாவளி கரையை கடந்ததும் கடுமையான வெப்பம் உணரப்பட்டது. எனவே, வெப்ப அலை நிகழ்வை உருவாக்கியதில் உம்பன் சூறாவளியின் பங்கை வல்லுநர்கள்  உறுதிப்படுத்தினர்.வங்கக்கடல, தென் தீபகற்பம், அரேபிக்கடல் போன்ற பகுதிகளில் இருந்த ஈரப்பதத்தை, 700 கி.மீ. பரப்பளவில் சூப்பர் புயலாக விளங்கிய உம்பன் சூறாவளி இழுத்துக் கொண்டது. இதனால் வரட்சியான மேலைக் காற்று மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய பாகுதிகளில் வீசி வருகிறது.

credit indianexpress.com