கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ரெம்டெசிவியர் என்ற மருந்து விரைவாக குணப்படுத்தி வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலகில் 53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3,40,000க்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து நோய் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் ரெம்டெசிவியர் என்ற மருந்து ஆராய்ச்சியாளர்களுக்கு தற்போது புதிய நம்பிக்கையை அளித்துள்ளது,
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க கிட்டத்தட்ட 130 மருந்துகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதில் சில மருந்துகளில், அதிக அளவிலான நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளதால் அவை உடலின் மற்ற உறுப்புகளை பாதிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எபோலோ என்ற உயிர்கொல்லி நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட ரெம்டெசிவியர் என்ற மருந்து தற்போது பயனிளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மூலம், ஒருவர் குணமடைய 15 நாட்கள் ஆகும் நிலையில், இந்த ரெம்டெசிவியரை எடுத்துக்கொண்டவர்கள் 11 நாட்களிலேயே குணமடைந்திருப்பதை அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை ரெம்டெசிமரை பயன்படுத்த ஆராய்ச்சியாளார்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தெரிவித்துள்ள சி.எஸ்.ஐ.ஆரின் இந்திய ஒருங்கிணைந்த மருத்துவக் கழகத்தின் இயக்குனர் ராம் விஸ்வகர்மா, இப்போது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க உள்ள ஒரே ஒரு பயனுள்ள அனுகுமுறை என்னவென்றால் ரெம்டெசிவியர் போன்ற ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பது என்றார்.
ரெம்டெசிவியர் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக மீட்க உதவுவதோடு மோசாமாக பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தையும் குறைப்பதாக தெரிவித்தார். மேலும் புதிய மருந்துகளை உருவாக்க நேரம் இல்லை எனவும் ஏனெனில் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க 5-10 ஆண்டுகள் ஆகலாம் எனவே இதுபோன்ற அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் கொரோனாவை தடுக்க உதவுகிறாதா எனபதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என தெரிவித்தார்.
தற்போது ஆராய்ச்சியாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள இந்த ரெம்டெசிவியர் மருந்து அனைத்து நாடுகளிலும் புழகத்திற்கு வந்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குணமடையும் வேகம் 31% அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.