திங்கள், 25 மே, 2020

ஜம்மு காஷ்மீரில் முழுமையாக அரசியல் நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும்

4 ஜி சேவைகள் மறுப்பு போன்ற சில கடினமான நடவடிக்கைகள் , சில சிறப்பு வாய்ந்த சூழல்களில் தேவையாக இருக்கிறது.இப்போது இந்த வசதியை கொடுக்காததன் மூலம், மாநில நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் பிரச்னைக்குரிய சூழல்களை கையாள்வதில் திறன் வாய்ந்ததாக இருக்க முடிகிறது.
ராம் மாதவ்
ஜம்மு& காஷ்மீர் விவகாரத்தில் ஒரு தர்க்கரீதியான முடிவு ஏற்பட, குடியேற்ற விதிகளை அரசின் அறிவிக்கையாக வெளியிடும் நடவடிக்கைகள் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதிதொடங்கின. அரசியலமைப்புசட்டத்தின் பிரிவு 35ஏ-வை ரத்து செய்ததன் மூலம் மாநிலத்தில் குடியேற்றத்துக்கான தகுதிகள் மறுபடி தொடங்கி விட்டதாக கூறப்பட்டது. பிரிவு 35 ஏ-என்பது நிரந்தர குடியுரிமை வகை என்பதை ஜம்மு& காஷ்மீர் பேரவை அறிமுகம் செய்வதை அனுமதிக்கிறது. இது தன்னிச்சையானது மற்றும் பாரபட்சமானதாகும். பல்வேறு நிகழ்வுகளில் உரிமை பெற்ற காலகட்டம் உட்பட கடந்த பல ஆண்டுகளாக இங்கே அவர்கள் வசித்தபோதிலும் கூட, நிரந்தர குடியுரிமை சான்றிதழ் என்பது, அடுத்தடுத்து வரும் மாநில அரசுகளின் ஆயுதமாக மாறி, பல்வேறு மக்களின் அடிப்படைஉரிமைகளை மறுக்கும் அளவுக்கு போகும்.
புதிய விதிகள் என்பது இப்போதைய நிரந்தர குடியுரிமை சான்றிதழ் அந்தஸ்து உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, 35 ஏ- பிரிவின் கீழ் குடியுரிமை அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தக் கூடியதாகும். பிரிவினையின் போது மேற்கு பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக ஜம்மு பகுதியில் இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்களும் இப்போது குடியுரிமை அந்தஸ்தை பெற முடியும். சாம்ப் மண்டல பகுதியில் இருந்து 1971ம் ஆண்டு அகதிகளாக வந்தவர்களுக்கும் இதேதான் உண்மையாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சாஃபாய் கர்மாசாரிஸ் எனப்படுவோர், ஒரு சில வேலைகளுக்காக 1950-களில் மாநிலத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கும் நிரந்தர குடியுரிமை சான்றிதழ் மறுக்கப்பட்டது. எனவே, கூர்க்கா பிரிவினர், காஷ்மீர் பண்டிட்களின் குழந்தைகள், மாநிலத்துக்கு வெளியே பிறந்தவர்கள், மாநிலத்தில் வசிக்கும் தாய்க்கும், மாநிலத்தில் வசிக்காத தந்தைக்கும் பிறந்தவர்களும் இப்போது குடியுரிமை அந்தஸ்தை கோரமுடியும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறியவர்களும் இந்த அந்தஸ்தின் கீழ் குடியுரிமை பெற முடியும். ஜம்மு & காஷ்மீருக்கு திரும்பி வந்து குடியுரிமை கோரமுடியும்.
புதிய குடியேற்ற கொள்கையானது, அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் குடியேற்றவாசிகளுக்குத்தான் என்பதை கட்டாயமாக்குகின்றது. இப்போது வரை பெரும்பாலான காஷ்மீரிகள் வெளிநாட்டினர்கள் என்று கருதப்பட்ட இந்த சூழலில்தான் மாநிலத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு புதிய விதிகள் பலன் தருவதாக இருக்கிறது.
இதுபோன்ற பல்வேறு முக்கிய நடவடிக்கைகளால் பயன் பெற்ற பெரும் எண்ணிக்கையிலான மக்கள், முக்கிய பிரமுகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் கண்களில் படவில்லை. அவர்கள் பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு உதவி செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்காக மட்டும்தான் அவர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இது ஜம்மு & காஷ்மீரின் ஒரு உத்தியாகவே மாறி விட்டது. ஜம்மு & காஷ்மீர் எப்போதுமே, பாகிஸ்தானின் கருவியாகவோ அல்லது தீவிரவாதிகளின் கருவியாவேதான் பார்க்கப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தீவிரவாதம், பிரிவினைவாத த்தில் இருந்து வெகுதொலைவில் உள்ளனர். இந்த நாட்டின் அமைதியான குடிமகன்களாக வாழவே அவர்கள் விரும்புகின்றனர். இது அந்த முக்கிய பிரமுகர்களுக்கு ஈர்ப்பதாக இருக்காது.
“1947-ம் ஆண்டில் இருந்து காஷ்மீர் விவகாரம் இருநாடுகளிடையே முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது. இதனால் அந்த மாநிலத்தின் மக்கள் தங்களை இந்தியாவின் குடிமக்களாக கருத வேண்டும் என்ற மனரீதியான முடிவுக்கு இடையூறாகவே இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்காகத்தான் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது, தங்கள் எதிர்காலம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று காஷ்மீர் மக்கள் இயல்பிலேயே சிந்திப்பதாகத்தான் இருக்கின்றது. இதன் மீது அவர்களுக்கு இருக்கும் கோபம், அந்நியப்படுத்தப்படுதல், நிச்சயமற்ற தன்மை ஆகியவைதான் அவர்களிடையே வன்முறையை விளைவிக்கின்றது” என போலீஸ் உயர் அதிகாரியாக இருந்த ஏ.எம் வட்டாலி தமது நினைவுக்குறிப்பில் கூறி உள்ளார்.
நரேந்திரமோடி அரசால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக, காஷ்மீரில் இருப்பவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் அல்லது தீவிரவாதிகள் என்று பார்ப்பது கைவிடப்பட்டது. அதற்கு பதில், வாழ்வாதாரத்தை இழந்த 1.20 கோடிப்பேர் என்று பார்க்க ஆரம்பித்தோம். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி இந்த உணர்வோடுதான் அரசின் அணுகுமுறை மாறி இருக்கிறது.
ஒரு காஷ்மீர்வாசி சொன்னார்; குள்ளநரிகள் தனித்தனியாக வாழும். ஆனால் இணைந்து ஒன்றாக அலறுகின்றன. இஸ்லாமாபாத் முதல் நியூயார்க் வரை பல்வேறு இஸ்லாமியர்கள் , அவர்களது ஆதரவாளர்கள் இந்த மாற்றதுக்கு எதிராக கொந்தளிக்கின்றனர். ஆனால், ஜம்மு& காஷ்மீர் பொதுமக்கள் பொதுவாக பெரும்பாலும் அமைதியாக இருக்கிறார்கள். கோடைகாலம் தொடங்கியது முதல், எல்லையில் தீவிரவாதிகளை அவர்கள் அனுப்புவதால், தீவிரவாத செயல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல், உள்ளூரில் தீவிரவாத அமைப்புகளில் சேருவது குறைந்திருக்கின்றது.
கடந்த காலங்களில் பிரிவு 370-ல் பல முறை திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு &காஷ்மீர் சட்டப்பேரவையில் 1954-ல் உரிமை பெறப்பட்டபோது, இந்திய அரசு அரசியலமைப்புசட்டத்தின் பெரும்பாலான பிரிவுகள் ஜம்மு & காஷ்மீருக்கு விரைவாக விரிவாக்கம் செய்யப்பட்டன. 1963-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி நாடாளுமன்றத்தில் கொடுத்த உறுதி மொழியில், பிரிவு 370-ஐ நீக்க, அடுத்த ஒருமாதம் அல்லது இரண்டு மாதங்களில் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.
நீண்டகாலமாகவே காஷ்மீர் அரசியல்வாதிகள் ஸ்ரீநகரில் வெறுப்பைத் தூண்டும்வகையில் பேசி வருகின்றனர். ஆனால், மக்கள் பெரும் அளவில் தொடர்ந்து அமைதியாகவே இருக்கின்றனர். ஷேக் அப்துல்லா, காஷ்மீரில் ஒரு கம்யூனிசவாதியாகவும், ஜம்மு வில் ஒரு கம்யூனிசவாதியாகவும், இந்திய அளவில் ஒரு தேசியவாதியாகவும் இருப்பதில் பெருமை கொள்கிறார் என்று பண்டிட் பிரேம்நாத் ஒருமுறை கூறி இருக்கிறார். அப்துல்லாவுக்கும், இந்திராகாந்திக்கும் இடையே நடைபெற்ற 1975-ம் ஆண்டின் டெல்லி ஒப்பந்தத்தில் கூட, பிரிவு 370-ன் கீழ் உண்மையான அதிகாரங்கள் திரும்ப கிடைக்கவில்லை. இந்திரா காந்தி அப்துல்லாவிடம், கடிகார முட்கள் மீண்டும் திரும்ப முடியாது என்று என்று சொன்னார். ஜம்மு&காஷ்மீர் மக்கள் டெல்லி ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டனர்.
இப்போது, மோடி மற்றும் அமித்ஷா இருவரும் பிரிவு 370 மற்றும் பிரிவு 35 ஏவில் இருந்து விலகி இருப்பது என்பதிலான நிச்சயமற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் திட்டமிட்டனர். கடந்த 70 ஆண்டுகளாக பிரிவு 370 என்ற பிரிவின் நிழலில் வாழ்ந்த ஜம்மு& காஷ்மீர் மக்கள், கொடுக்கப்பட்ட புதிய அந்தஸ்து ஒரு வாய்ப்பு என்று கருதுகின்றனர். இதன் காரணமாகத்தான் இந்த பகுதி கடந்த ஒன்பது மாதங்களாக பெரும்பாலும் அமைதியாக இருக்கிறது. அதிக அளவில் பாதுகாப்பு படையினர் குவிப்பு, தலைவர்கள் கைது காரணமாகத்தான் இந்த அமைதி ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறினர். சில மூத்த தலைவர்கள் தவிர, பெரும்பாலான அரசியல்வாதிகள் விடுவிக்கப்பட்டு விட்டனர். பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை கூட குறிப்பிடத்தக்க அளவில் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மக்கள் வீதிகளில் இறங்கி ஆஸாதி கோஷம் போட்டபடி கல்லெறிவதும் இல்லை.
மாநில நிர்வாகம் ஊக்கப்படுத்த வேண்டிய நேரம் இதுதான். மக்களின் சிறந்த தன்மைக்கு அழகான சாதகமாக இருங்கள். 4 ஜி சேவைகள் மறுப்பு போன்ற சில கடினமான நடவடிக்கைகள் , சில சிறப்பு வாய்ந்த சூழல்களில் தேவையாக இருக்கிறது.இப்போது இந்த வசதியை கொடுக்காத தன் மூலம், மாநில நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் பிரச்னைக்குரிய சூழல்களை கையாள்வதில் திறன் வாய்ந்ததாக இருக்க முடிகிறது. சிறப்புவாய்ந்த சூழல்கள் காரணமாக சில காலத்துக்கு நிர்வாக ரீதியாக சில பிரிவுகளை கையாள அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. அந்த சூழல்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவே ஜம்மு & காஷ்மீரில் தேர்ச்சி பெற வேண்டும். யூனியன் பிரதேச மாநிலத்தில் முழு வீச்சில் அரசியல் நடவடிக்கைகள் தொடங்க அனுமதிக்கப்படுவதற்கான நேரம் இதுதான்.
முழுமையான அரசியல் ஒற்றுமை என்பது மாநிலத்தின் மக்களால் இயக்கப்பட வேண்டும். இதுதான் எல்லைகளில் இருக்கும் குள்ளநரிகளுக்கு இறுதியாக முடிவாக சொல்ல வேண்டிய செய்தியாகும். ஜம்மு& காஷ்மீர் முழுமையாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. தீர்வு காணவேண்டிய ஒரே சர்ச்சை என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் திரும்ப கிடைக்க வேண்டியது ஒன்றுதான்.
இந்த கட்டுரை முதலில் கடந்த 21-ம் தேதியிட்ட நாளிதழில் ‘Reward the people’ என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையாளர் பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் மற்றும் இந்தியா பவுண்டேஷனின் இயக்குநர்.