ஞாயிறு, 24 மே, 2020

இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி , மனநலன் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது.

உடல் கட்டுக்கோப்புடன் இருப்பது உடல் ஆரோக்கியம், நல்வாழ்வின் நிலையாகும். மேலும் குறிப்பாக திறனுடன் தினசரி வேலைகளை செய்யக் கூடிய திறன் கிடைக்கும். எனவேதான், ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருப்பதுடன் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரத்தில் நீரழிவு நோயாளிகள் என்று வரும்போது ரத்த த்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பது, உடல் கட்டுக்கோப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களாகும் என்று நீரழிவு நோயில் இருந்து விடுதலை என்ற அமைப்பின் நிறுவனர் டாக்டர் பிரமோத் திரிபாதி கூறுகிறார்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி , மனநலன் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது.
சில எளிய பயிற்சிகளை இங்கே பார்க்கலாம்
தொடர்ந்து உங்கள் உணவு கட்டுப்பாட்டுமுறையை மேற்கொள்ளுங்கள்
நடுநிலையான உணவு கட்டுப்பாட்டு முறையை தொடர்ந்து கடைபிடியுங்கள் அதனை தொடர்ந்து செய்யுங்கள்.
உடலின் தேவைக்கு ஏற்ப கணக்கிடப்பட்ட கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்ளவும். விரும்பத்தகுந்த உடல் எடையை அடைய இது உதவும்.
எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நார்சத்து உணவுப் பொருட்களை உட்கொள்ளவும் (முழு தானியங்கள், பருப்பு வகைகள், அனைத்து பச்சைக் காய்கறிகள்), அதே போல கீரைகள், காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும். உணவு உண்ணும்போது சம அளவு தானியங்கள், பருப்பு, சமைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் சலாட் எடுத்துக் கொள்ளுங்கள்.
பழங்களை குறைவாகச் சாப்பிடுங்கள்
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ள உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளவும்.
வடிகட்டிய கடுகு எண்ணைய், கடலை எண்ணைய், ரைஸ் பிரான் ஆயில், மற்றும் நல்லெண்ணைய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். சாலட்களுக்கு ஆலிவ் எண்ணைய் உபயோகிப்பது நல்லது.
போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். உடல் எடையின் ஒவ்வொரு பத்து கிலோவுக்கும் 250 மில்லி தண்ணீர் என்று கணக்கு வைத்துக் கொள்ளலாம்.
இரவு 11 மணிக்கு முன்பு உறங்கச் செல்லவும்.
நீரழிவு நோயாளிகள் என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யலாம்.
நீரழிவு நோயாளிகள் உணவு கட்டுப்பாடுகளை விடவும், உடற் பயிற்சிகள் செய்வதில் அதிக கவனம் செலுத்தலாம் என்று டாக்டர் திரிபாதி சொல்கிறார்.
முழு அளவிலான உடல் இயக்கப் பயிற்சிகள் – கழுத்துக்கான பயிற்சி, தலையை சாய்த்தல், உடலை முன்பின் வளைதல், பக்கவாட்டில் வளைதல், தலையை சுற்றுதல், கைகள், முழங்கை உடற்பயிற்சிகள், இடுப்பு, இடுப்பை முறுக்குதல், கால் அசைவுகள் போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
சூரிய நமஸ்காரம் என்ற யோகா செய்யலாம். ஒரு நாளைக்கு குறைந்த து 6-12 முறை சூரிய நமஸ்காரம் செய்யலாம்.
உட்கார்ந்த நிலையிலான பயிற்சிகள் (யோகா பயிற்சிகள்)
உணவு உண்டபின் இரண்டு மணி நேரம் கழித்து ரத்த த்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க படிகளில்(100-300 படிகள்) ஏறலாம்.
ஸ்க்கிப்பிங்க் (எடை கட்டுப்பாட்டுடன், முழங்கால்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் செய்யவும். )
ஒவ்வொரு நாளும் 15-20 நிமிடங்கள் நடக்கலாம்..
ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்யலாம்(பிராணயாமம்)
தினமும் 30 நிமிட பயிற்சிகளை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
மனநலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளுடன் அதற்கு சமமாக மனநலனும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்போதைய வாழ்க்கை முறைகள் காரணமாக பல்வேறு வகையான அழுத்தங்கள், பாதகமான அம்சங்கள் நம்மை சுற்றி நடக்கின்றன. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மனதுக்குள் வைத்திருக்கும் சேமிக்கப்பட்ட மன அழுத்தங்களை, தொடர்ச்சியான மன அழுத்தங்களை தினமும் வெளியேற்றி விட வேண்டும். இதற்கான முழு மூளை தோரணை தியானம் அறிவுறுத்தப்படுகின்றது. இந்த பயிற்சியைச் செய்ய குறிப்பிட்ட வழியில் தரையில் அமர வேண்டும். மோசமான நினைவுகளில் கவனம் செலுத்த வேண்டும். உடலில் அதனை உணர வேண்டும். அவற்றை வெளியேற்றுவது என்று வலுவாக எண்ண வேண்டும். இந்த வழியில் அந்த அழுத்தங்கள் வெளியேறி விடும்.
முழுமையான மூளை தோரணை தியானம் தவிர, சுவாசத்தை கண்காணிக்கும் தியானம், ஆன்மா-மனம்- உடல் சிகிச்சை முறை ஆகியவையும் இருக்கின்றன. இவையும் மன அழுத்தத்தை மற்றும் பாதக எண்ணங்களைப் போக்குவதற்கான மிகச்சிறந்த வழிகளாகும்.
மேற்குறிப்பிட்ட அனைத்தும் பாதகமான எண்ணங்களை வெளியேற்ற உங்களுக்கு உதவும். சாதகமான எண்ணங்களுடன் இருக்க உதவும் என்று டாக்டர் திரிபாதி சொல்கின்றார்.
credit india express.com