மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலை, முதுநிலை பட்டயப் படிப்பிற்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தமிழகத்தில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும் என்றும், 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் தமிழகத்தில் நீட் கலந்தாய்வை நடத்தக் கூடாது எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. அதேபோல், 2020 ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு முடிவுகளை எதிர்த்தும் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.