மேற்கு வங்க மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் 2,961 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 250 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மற்ற மாநிலங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டு, தங்கள் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனர்.
மேலும் 60 பேர் நாளை சொந்த ஊர் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் வேலையை ராஜினாமா செய்து விட்டு மணிப்பூர் திரும்பிய கிறிஸ்டெல்லா கூறுகையில், 'பணியை ராஜினாமா செய்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. அங்கு வேறுபாடு, இனவெறி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிட்டது.
சில சமயங்களில் மக்கள் எங்கள் மீது எச்சில் துப்பினார்கள். மேலும் செவிலியர்களுக்கு தேவையான போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை.நாங்கள் எங்கே சென்றாலும் மக்கள் கேள்வி எழுப்பினர்' என கூறியுள்ளார்.
Around 300 nurses have left Kolkata for Manipur after resigning from their jobs. Around 60 more nurses will be leaving tomorrow. We're getting many calls from people who want to go back to Manipur: JS Joyrita, Deputy Residence Commissioner, Manipur Bhavan, Kolkata (20.05.2020)
இதைப் பற்றி 305 பேர் பேசுகிறார்கள்
இதற்கு முன்னதாக மேற்கு வங்கத்தில் 185 செவிலியர்கள் வேலையை ராஜினாமா செய்ததாக செய்தி வெளியானது. கொரோனா அச்சம் காரணமாக பெற்றோர் கொடுத்த அழுத்தத்தால் ஊர் திரும்பியதாக சிலர் தெரிவித்திருந்தனர்.
credit ns7.tv/ ANI