திங்கள், 1 ஜூன், 2020

குறைந்த பயணிகளுடன் இயங்கும் பேருந்துகள்

தமிழகத்தில் 50 விழுக்காடு பேருந்துகள் 60 சதவீத பயணிகளுடன் இன்று காலை முதல் இயக்கப்படுகிறது. போக்குவரத்து காரணங்களுக்காக தமிழகம் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மண்டலத்திற்குள் மட்டும் பொதுப் போக்குவரத்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

8 zones, tamilnadu ttransport 8 zones

மண்டலம் VII-ல் உள்ள  செங்கல்பட்டு, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் எட்டாவது மண்டலம் VIII-ல் உள்ள  சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து,  அனைத்து மண்டலங்குக்குள்  50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது.

 

அறிவிக்கப்பட்ட 8 மண்டலங்கள்: 

மண்டலம் I: கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்.

மண்டலம் II: தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி.

மண்டலம் III: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி

மண்டலம் IV: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை.

மண்டலம் V: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம்.

மண்டலம் VI: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

மண்டலம் VII: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர்.

மண்டலம் VIII: சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள்.

கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதும் கூட மிகவும் தீவிரமானது: 

தமிழகத்தில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டாலும் முடிந்த வரை ஒரு மீட்டர் இடைவெளி விடுதல், முகக்கவசம் அணிதல் போன்றவைகள் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதும் கூட மிகவும் தீவிரமானது என்பதனை நாமும் உணர வேண்டும்.

பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை : 

50 விழுக்காடு பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. மேலும், 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது
இருப்பினும், பேருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

நாமக்கல் மாவட்டத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவு:  

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறைந்த அளவே இன்று காலை 6 மணி முதல் இயக்கப்படுகின்றன. பயணிகளின் எண்ணிக்கையும் வெகு குறைவாகவே காணப்படுவதாக ஆல் இந்தியா ரேடியோவின் சென்னை வானொலி நிலையம் தெரிவித்தது.

இ-பாஸ் குறித்த அறிவிப்பு:  

pass for other districts entry chennai corporation

மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மண்டலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து இருக்காது. தங்கள், சொந்த வாகனத்தில் பயணிக்க விரும்புபவர்கள், வழக்கம் போல இ பாஸ் பெற்று பயணிக்கலாம்.

credit https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-public-transport-partially-resumes-from-today-e-pass-news-images-195478/