திங்கள், 27 ஜூலை, 2020

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும்” - மு.க ஸ்டாலின்

Image

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றம் கூடாத சுகாதாரப் பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்தி, பல்வேறு அவசரச் சட்டங்களைப் பிறப்பித்து வரும் மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்கள் வசதிக்காக, புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 


சுற்றுப்புறச்சூழல் முன் அனுமதி பெற வேண்டிய எண்ணற்ற திட்டங்களை “மறுவகைப்படுத்தி” அவற்றை எல்லாம் “அனுமதி பெறத் தேவையில்லாத” பட்டியலில் சேர்த்திருப்பது, மக்கள் விரோத அறிவிக்கையாகவே உள்ளதாக மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எனவே, இந்த அறிவிக்கையை திரும்பப்பெற்று, நாட்டில் உள்ள இயற்கை வளங்களையும், மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாத்திட மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.