புதன், 22 ஜூலை, 2020

கொரோனா தடுப்பு மருந்து : தமிழகத்தில் சோதனையை ஆரம்பித்தது கோவாக்ஸின்!

Covaxin Vaccine human trial will be started at SRM hospital in Tamil Nadu : கொரோனா வைரஸ் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் இரண்டு நிறுவனங்கள் கொரோனாவைரஸ் பரவலை தடுக்க தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முனைப்பில் உள்ளது. ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் பாரத் பயொடெக் நிறுவனம் கோவாக்ஸின் என்ற  மருந்தை கண்டறிந்துள்ளது.  மனிதர்கள் மீதான முதற்கட்ட சோதனை நல்ல முடிவுகளை தர இரண்டாம் கட்ட சோதனை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஹரியானாவில் முதலில் மனிதர்களுக்கு பரிசோதனை துவங்கியது. பக்கவிளைவுகள் ஏதும் இதுவரை இல்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ட்வீட் செய்திருந்தார்.

தமிழகத்தில் இந்த தடுப்பூசியை மனிதர்கள் மீது பரிசோதிக்க முடிவுகள்  மேற்கொள்ளப்பட உள்ளது. எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் கோவாக்ஸின் தடுப்பூசிகளை மனிதர்கள் மீது பயன்படுத்துவதற்கு பணிகள் நடைபெற்றுவருகிறது. காட்டான்குளத்தூரில் அமைந்திருக்கும் எஸ்.ஆர்.எம். மருத்துவமனை இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. சரியான உடல் தகுதி கொண்ட நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பிறகு இந்த தடுப்பூசி போடப்படும்.

 

முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்படும். 14 நாட்கள் அவர்களின் உடல்நிலை ஆராய்ச்சி செய்யப்படும். பிறகு 14 நாட்களுக்கு பிறகு இரண்டாம் டோஸ் வழங்கப்படும். இந்த பரிசோதனையில் இருக்கும் நபர் தன்னை கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். 194 நாட்களுக்கு பிறகு இந்த தடுப்பு மருந்து மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதா என்று கண்டறியப்படும்.