செவ்வாய், 28 ஜூலை, 2020

ஆப்கானிஸ்தானை அடைந்தது?

இந்து சமயம் எப்போது ஆப்கானிஸ்தானை அடைந்தது?

‘ஆப்கான் இந்துக்கள், சீக்கியர்கள்: ஆயிரம் ஆண்டுகளின் வரலாறு’ எனும் புத்தகத்தை எழுதிய வரலாற்றாசிரியர் இந்தர்ஜீத் சிங் கருத்துப்படி, “ஒரு காலத்தில் காபூல் உட்பட கிழக்கு ஆப்கானிஸ்தானில் இந்து ஆட்சியாளர்கள்  ஆதிக்கம் செலுத்தினர்” என்று தெரிவித்தார்.

மேலும் , “இஸ்லாம் 7 ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானில் நுழைந்தது. கி.பி 600 முதல் 780 வரை ஜுன்பில் என்ற இந்து சமய வம்சம் ஆப்கானிஸ்தானின் காந்தஹார் முதல் கஸ்னி வரையிலான பகுதிகளை ஆட்சி செய்தது. அதன் பின்னர், இந்து சமய சாகி அரசு ஆட்சி செய்தது. 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்துப் படைகளை தக்கவைத்துக் கொண்ட கசானவித்து வம்சம்  ஈரான், ஆப்கானித்தான், நடு ஆசியாவின் திரான்சாக்சியானா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளை ஆண்டனர். 1504 ஆம் ஆண்டில் தான் முகலாய பேரரசர் பாபர் காபூலைக் கைப்பற்றினார் … காபூல்  இந்துஸ்தானின் ஒரு அங்கம் ’என்று பாபர் குறிப்பிட்டார். காபூல் மாகாணம் 1738 வரை இந்துஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் இருந்தது.” என்று இந்தர்ஜீத் சிங் தெரிவித்தார்.

சீக்கிய சமயம் ஆப்கானிஸ்தானை எப்போது  அடைந்தது?

16 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில்,  சீக்கிய மதகுரு குருநானக்  ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்த போது, சீக்கிய மதத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. குருநானக்கின்  ஆரம்பகால ஜனம்சகிஸ் புத்தகத்தில் (வாழ்க்கை நிகழ்வுகள்) பதிவுசெய்யப்பட்ட  பயண வரலாற்றின் படி, 1519-21 காலப்பகுதியில், குருநானக்  தனது சீடரான பாய் மர்தானாவுடன் இன்றைய காபூல், காந்தஹார், ஜலாலாபாத், சுல்தான்பூர் போன்ற  நகரங்களில் பயணம் செய்தனர்.  இந்த இடங்கள் அனைத்தும் தற்போது குருத்வாராக்களைக் கொண்டுள்ளன. அதன் பிறகு , காபூல் நகரம் பாபரின் ஆட்சியின் கீழ் வந்தது. காபூலில் இருந்த குருநானக்கின் சீடர்கள் இன்றைய பஞ்சாப் பகுதிக்கு வருகை தரத் தொடங்கினர். ஏழாவது சீக்கிய மதக் குருவான ஹர் ராய், சீக்கிய மிஷனரிகளையும்  (மத ரீதியிலான செய்லபாடுகளுக்காக)  காபூலுக்கு அனுப்புவதில் முக்கிய பங்கு வகித்தார்.

“ஆப்கானிய சமுதாயத்தில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் செழிப்பான வர்த்தகத்தை பல ஆவணங்கள் பதிவு செய்கின்றன, ஆனால் இன்று, அவர்களில் 99 சதவீதம் பேர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.  அவர்களை தங்களின் பூர்வீக மக்கள் என்பதை ஏற்க ஆப்கானிய சமுதாயம் மறுக்கிறது. அவர்கள், தங்கள் தாய்நாட்டிற்கு செய்த பங்களிப்பு அளப்பரியது . ஆப்கானிஸ்தானில் ஒருவர் இந்து அல்லது சீக்கிய சமய  அடையாளத்துடன் வாழ முடியும் என்பது தான் வரலாறு ” என்று சிங் தனது புத்தகத்தில் எழுதினார்.