வியாழன், 30 ஜூலை, 2020

ராஜஸ்தான் அரசியல் சூழல் – யாரும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராததன் மர்மம் என்ன?

Manoj C G

ராஜஸ்தான் அரசியல் விவகாரம் வேதாளம் – விக்கிரமாதித்தன் கதை போன்று நீண்டுகொண்டே போகிறது. முதல்வர் அசோக் கெலாட், 3வது முறையாக, கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவிடம், வரும் 31ம் தேதி சட்டசபையை கூட்ட அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ஒரு வாரத்தில் மட்டும் ,முதல்வர் கவர்னரிடம் வைக்கும் 3வது கோரிக்கை இது ஆகும். தற்போதுகூட, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, ஆனாலும், இந்த அரசியல் விவகாரம் தற்போதைக்கு முடியாது என்ற சூழலே அங்கு நிலவிவருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த அசாதாரண நிலை, ஜூலை 2வது வாரத்தில் துவங்கியது. தனது தலைமையிலான அரசுக்கு சட்டசபையில் 200 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளதாக முதல்வர் அசோக் கெலாட், எந்தெவாரு இடத்திலும் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று சொல்லவில்லை. இந்த விவகாரத்தில் காங்கிரசின் திட்டம் தான் என்ன? ஒரே இரவில் முடியும் இந்த விவகாரம், ஏன் ராஜஸ்தானில் மட்டும் நீண்டுகொண்டே செல்கிறது?

ராஜஸ்தானில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலை தொடர்பாக, காங்கிரஸ் கட்சிக்கும், அசோக் கெலாட் தரப்புக்கும் இடையே பெரும்விவாதமே நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் கேள்விகள் எழுப்பவோ அல்லது இதில் தலையிடவோ, மாநில கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அதாவது, சட்டசபையை கூட்ட உத்தரவிடுவதில் கவர்னருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. கவர்னர் இந்த விவகாரத்தில் தலையிட்டால், விவகாரம் நீண்டுகொண்டே செல்லும். காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளை கவர்னர் நிராகரிக்கும் பட்சத்தில், கவர்னரை அப்பதவியில் நீக்குவதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபடும்.

சட்டசபையை, கவர்னரின் தலைமையில் நடத்த வேண்டும் இல்லையென்றால், கவர்னர், காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளை ஏற்று, சட்டசபையை கூட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதே காங்கிரசின் நிலையாக உள்ளது. இல்லையென்றால், கவர்ன்ர, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். இதற்கு அவர் 10 முதல் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். இதற்கும் எங்களுக்கு எவ்வித ஆட்சபணை இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளா்.

எங்களுக்கு சட்டசபையில் பெரும்பான்மை உள்ளதால் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. தேவையில்லாமல் எங்கள் மீது சாட்டை சுழற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2016ம் ஆண்டில் அருணாச்சல பிரதேச சட்டசபை வழக்கில் உச்சநீதிமன்றம் நபாம் ரெபியா மற்றும் பமாங் பெலிக்ஸ் – துணை சபாநாயகர் இடையே ஏற்பட்ட மோதல் வழக்கு தொடர்பாக அளித்த தீர்ப்பை, காங்கிரஸ் கட்சி மேற்கோள் காட்டியுள்ளது.

சச்சின் பைலட் கேம்ப்

சச்சின் பைலட் உள்ளிட்ட 18 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள், தாங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன்ர. இதற்காக, சட்டசபையை கூட்டும் விவகாரத்தில் அவர்கள் மவுனமாக உள்ளனர். இவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்படாத பட்சத்தில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால், அவர்கள் அசோக் கெலாட்டுக்கு எதிராக வாக்கு அளித்தால், கட்சி விதிகளை மீறியதாக கூறி, அவர்கள் தகுதிநீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது.
அசோக் கெலாட் அரசு, சட்டசபையில் பெரும்பான்மையை இழந்துவிட்டது. தங்களது அரசியல் பலத்தால் அவர்கள் அதை மறைத்து வருகின்றனர். ஏன் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவில்லை என்று சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தங்கள் அரசுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களின் லிஸ்டை, அவர்கள் கவர்னரிடம் வழங்கவில்லை. அசோக் கெலாட் கவர்னரை சந்தித்தபோது அந்த லிஸ்ட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏன் அது பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என் சச்சின் பைலட் முகாம் கேள்வி எழுப்பியுள்ளது.

அசோக் கெலாட் அரசில் இடம்பெற்றுள்ள 2 சிபிஎம் எம்எல்ஏக்கள், மற்றும் 3 பிடிபி எம்எல்ஏக்கள் வெளியேறுவர் என்று பைலட் முகாம் எதிர்பார்த்துள்ளது. அதேபோல், தகுதி நீக்கம் செய்யப்பட்டால், 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் சேரமாட்டார்கள் என்று எதிர்பார்த்துள்ளது. ஒரு தேசிய கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றொரு தேசிய கட்சியில் இணையமாட்டார்கள் என்று பைலட் ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

பாரதிய ஜனதா தரப்பு

மாநில அரசியலில் அசாதாரண சூழல் ஏற்பட்டால், நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற கோரிக்கை முதலில் எதிர்க்கட்சியிடமிருந்து தான் வரும். ஆனால், ராஜஸ்தானில் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து இன்னும் அந்த கோரிக்கை வரவில்லை. பா.ஜ., பிரதிநிதிகள் கவர்னரை சந்தித்துள்ள போதிலும், அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கையை அவர்கள் வைக்கவில்லை. சட்டசபையை கூட்டவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்திருந்தாலும், உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்று அவர்கள் கவர்னருக்கு அழுத்தம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியில் உள்ள பல எம்எல்ஏக்கள், பாரதிய ஜனதா கட்சிக்கு வருவர் என்று அக்கட்சி எதிர்பார்த்து, அதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறது. ஆனால் நடப்பதோ வேறொன்றாக உள்ளது. சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுக்காக வக்கீல்கள் ஹரீஷ் சால்வே மற்றும் முகில் ரோதகி பங்கேற்பதை கவர்னர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கிறது. பாரதிய ஜனதா கட்சியோ இந்த விவகாரத்தில் கையறுநிலையில் உள்ளது என்பதே நிதர்சனம்.