சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் வெளிநாட்டு பறவைகளை ரயிலில் கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஹவுரா ரயிலில் சென்னைக்கு வெளிநாட்டு பறவைகளை சிலர் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சென்ட்ரல் ரயில்வே பார்சல் அலுவலக வாசலில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனம் ஒன்றில் சோதனை செய்த போது ஆறு கூண்டுகளில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான குரங்குகள்,வெளிநாட்டு பறவைகள் இருந்ததையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் மதுரையை சேர்ந்த ரியாஸ், முகமது ஆசிப்,கொசப்பேட்டையை சேர்ந்த பரத் ,சூளையை சேர்ந்த ஜேசு ஆகியோர் இச்சம்வத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிவந்தது. இவர்கள் கொல்கத்தா மாநிலம் ஹவுராவில் இருந்து ரயில் மூலம் வெளிநாட்டு பறவைகளை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்து வாகனம் மூலம் புரசைவாக்கத்திற்கு கொண்டு செல்வதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இவைகள் சட்டவிரோதமாக கடத்தி வந்த வெளிநாட்டு பறவைகளா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.