சனி, 25 ஜூலை, 2020

சீனாவை குறிவைத்த இந்தியா: அண்டை நாடுகளுடன் ஏல விதிமுறையில் மாற்றம்

இந்தியா, பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பின் அடிப்படையில்.அண்டை நாடுகளுடனான வர்த்தக விவகாரங்களில் 2017ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட பொது நிதி விதிகளில் மாற்றம் செய்துள்ளது. இதன்மூலம் எல்லையை ஒட்டிய அண்டைநாடுகளிடையே, பொருட்கள் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளில் உள்ள ஏல விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் இந்த நடவடிக்கையால், சீனா பெரிதும் பாதிப்பு அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உடன் அண்டைப்பகுதியில் உள்ள நாடுகள் பொருட்கள் கொள்முதல் அல்லது விற்பனை செய்ய விரும்பினால், அவர்கள் முதலில், இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) பதிவு செய்திருக்க வேண்டும். இந்த பதிவுக்கு, மத்திய அரசின் உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இந்து அரசியல் ரீதியான மற்றும் பாதுகாப்பு ரீதியிலான கிளியரன்ஸ் சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநில அரசுகளும் அண்டை நாடுகளில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்ய, இந்த வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதலுக்கு இந்த புதிய விதிகளிலிருந்து டிசம்பர் 31ம் தேதி வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் ஒப்பந்தமாகியுள்ள விவகாரங்களுக்கு இந்த புதிய விதிகள் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா, நேபாளம், பூடான், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டுடன் தனது எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வங்கதேசம், நேபாளம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அதிகளவில் கடன் வழங்கியுள்ளது. இந்தியா, ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து 41 நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அளவில் 64 நாடுகளுக்கு 30.59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவுடன் புதிய வர்த்தக உறவுகளில் ஈடுபட உள்ள அண்டை நாடுகள் அதற்கென்று மத்திய நிதித்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அமைப்பிடம் முறையான பதிவு பெற்றபிறகே, அவர்கள் ஏல நடைமுறைகளில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பிற்கு, ஒப்பந்தத்தை நாட்டின் பாதுகாப்பு கருதி ரத்து செய்யவோ, நிராகரிக்கவோ முழு உரிமை உண்டு, அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அது தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சீன பொருட்கள் அதிகளவில் உள்ளதும், இந்திய நிறுவனங்களில் சீனாவிவ் முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்தும் விதத்திலேயே இந்த புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

ஜூன் மாதம் 23ம் தேதி வெளியிடப்பட்டுள்ள புதிய உத்தரவின்படி, இந்தியாவில் புதிய பொருட்கள் வர்த்தகம் செய்யப்பட்டால், விற்பனையாளர்கள், அரசின் இ-மார்க்கெட்பிளேஸ் போர்டலில், அது எந்த நாட்டின் தயாரிப்பு உள்ளிட்ட விபரங்களை அதில் அளிக்க வேண்டும். அண்டை நாடுகளில் இருந்து ரூ.200 கோடிகள் அளவிற்கு புதிய பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டால், அந்த நிறுவனம், உள்நாட்டு தயாரிப்புகள் 20 சதவீதம் வரை வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

இந்தியா – சீனா எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன படைகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாகவும், சுயசார்பு இந்தியா திட்டத்தின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் சீன தயாரிப்பு பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன.

2018-19ம் நிதியாண்டில், 70.32 பில்லியன் டாலர்கள், 2019 ஏப்ரல் முதல் 2020 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் இந்தியா, சீனாவில் இருந்து 62.38 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பொருட்களைஇறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு, கடந்த ஏப்ரல் மாதத்தில் அந்நிய நேரடி முதலீடு விவகாரத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி, அண்டை நாடுகள் இந்தியாவில் தங்களது பொருட்களை வர்த்தகம் செய்ய விரும்பினால், அதற்கு முறையான அனுமதி பெற வேண்டும். இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்படாத வகையில், வெளிநாட்டு முதலீடுகள் அனைத்தும் மத்திய அரசின் ஒப்புதலின் படியே நடத்தப்பட வேண்டும் என்று இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் ஹெச்டிஎப்சி நிதிச்சேவையில், சீனாவில் சென்ட்ரல் வங்கி சீன மக்கள் வங்கி உள்ளிட்டவை தங்களது முதலீட்டை 1 சதவீதத்திற்கு மேல் அதிகரித்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளின் பொருளாதாரம், கொரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தனது உள்நாட்டு நிறுவனங்களை காக்கும் வகையில், வெளிநாட்டு முதலீடுகளை குறிப்பாக அண்டைநாடுகளுடனான முதலீடுகளை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் அனைத்து அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், நிதிச்சேவை நிறுவனங்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பொது- தனியார் பங்களிப்பு நிறுவனங்கள், டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் துறைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்று இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையில், மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், உள்ளிட்ட துறைகளின் இணை செயலர்கள் அந்தஸ்திலான அதிகாரிகள் இடம்பெற்றிருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.