ஃபிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை பெற ஒப்பந்தம் செய்திருந்தது இந்திய அரசு. காங்கிரஸ் அரசு இந்த போர் விமான கொள்முதலில் ஊழல் நடைப்பெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தி இருந்தது.இன்னிலையில் ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்க்கு புறப்பட்டது.பிரான்ஸிலிருந்து வரும் போர் விமானங்கள் ஹரியானாவிலிருக்கும் அம்பலா விமான படை தளத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.
36 போர் விமானங்களை பெறுவதற்கு இந்தியா ஒப்பந்தம் போட்டது. தற்போது ஃபிரான்ஸில் இருந்து 5 போர் விமானங்கள் இந்தியாவிற்கு வருகை புரிய உள்ளது. நாளை ஐக்கிய அரபு நாட்டில் நிறுத்தப்பட்டு பிறகு இந்தியாவிற்கு வருகிறது. விமானங்கள் 29ம் தேதி அம்பலாவில் தரையிறங்கும். ஃபிரான்ஸில் இருக்கும் இந்திய தூதர், இந்த விமானங்களை இயக்க இருக்கும் விமானிகளுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைக்கும் புகைப்படங்களை இந்திய தூதரகம் தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.