புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கோவிட் -19க்கும் இடையிலான உறவை புதிய ஆராய்ச்சி படித்தது. ஆராய்ச்சியின் கீழ், 24 மாதங்களுக்கு முன்னர் புற்றுநோய் கண்டறியப்பட்ட ஒரு நோயாளிக்கு, கடுமையான கோவிட் -19 அறிகுறிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வு புதன்கிழமை, Frontiers in Oncology எனும் அறிவியல் நாளிதழில் வெளியிடப்பட்டது. லண்டனின் கிங்ஸ் கல்லூரி மற்றும் கைஸ் & செயின்ட் தாமஸ் அறக்கட்டளை ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பிப்ரவரி 29 முதல் மே 12 வரை கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்ட 156 புற்றுநோயாளிகளை இந்த ஆய்வு பரிசோதித்தது. இதில், 82% நோயாளிகள் லேசான அல்லது மிதமான கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருந்தனர். 18% பேர் கடுமையான நோய்த் தாக்கதலுக்கு இலக்காகியிருந்தனர்.
37 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆய்வில், 22% நோயாளிகள் உயிரிழந்தனர். ஆசிய இனத்தைச் சேர்ந்தவர்கள்; புற்றுநோய் சிகிச்சை காலத்துக்குப் பிந்தைய மருத்துவ சேவைகளில் இருக்கும் நோயாளிகள்; கோவிட் -19 பெருந்தொற்று தோன்றுவதற்கு 24 மாதங்களுக்கு முன்னர் புற்றுநோய்க் கண்டறியப்பட்ட நோயாளிகள் ஆகியோரிடம் இறப்பு விகித அபாயம் அதிகமிருப்பதாக கண்டறியப்பட்டது. டிஸ்போனியா (மூச்சுத் திணறல்) அதிக சிஆர்பி (சி-ரியாக்டிவ் புரதம்) அளவுகள் கொண்ட கொரோனா நோயாளிகளுக்கும் இறப்புக்கான ஆபத்துக்கள் அதிகளவு காணப்பட்டது.
கடுமையான கொரோனா பெருந்தொற்று அறிகுறிகள், காய்ச்சல், டிஸ்போனியா, இரைப்பைக் குடல் அழற்சி, 24 மாதங்களுக்கு முன்னர் புற்றுநோயைக் கண்டறிதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான நோயாளிகள் பின்தங்கிய சமூக-பொருளாதார வகுப்பை சேர்ந்த ஆண்கள்; பாதி பேர் வெள்ளையினத்தவர், 22% கறுப்பினத்தவர், 4% ஆசிய கண்டத்தைச்சேர்ந்தவர்கள் . உயர் இரத்த அழுத்தத்திற்குப் பின் நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, இருதய நோய் கொரோனா உயிரிழப்பு ஏற்படுத்தும் இணை நோய்களாக உள்ளது.
சிறுநீரக / பெண்ணோயியல் (29%), ரத்தக்கசிவு (18%) மார்பகம் (15%) என்ற விகிதத்தில் புற்றுநோயாளிகள் கலந்து கொண்டனர். , ரத்தக்கசிவு புற்றுநோய்களிடம் கொரோனா தீவிரத்தன்மை அதிகரித்து காணப்படுகிறது.