இந்தியாவிற்கு வரும் 5 ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலாவில் புதன்கிழமை காலை தரையிறங்கியது. இந்த ரஃபேல் போர் விமானங்கள் இந்திய கோல்டன் 17 விமான படைப்பிரிவுக்கு புத்துயிர் அளிக்க உள்ளது.
இந்த ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படை (ஐ.ஏ.எஃப்) படைப்பிரிவின் வலிமையை 31 ஆக அதிகரிக்கும். 2022 ஆம் ஆண்டில் ஆர்டர் செய்யப்பட்ட அனைத்து 36 ரஃபேல் ஜெட் விமானங்களும் வழங்கப்படும்போது, அது 32 படைப்பிரிவுகளுக்கு எடுத்துச் செல்லப்படும். அது 42 விமானப்படை பிரிவுகளுக்கு அனுமதிக்கப்பட்ட பலத்திற்கு கீழே இருக்கும்.
அதிநவீன 4.5 தலைமுறை ரஃபேல் போர் விமானம் ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட இருமடங்கு 1.8 மேக் வேகத்துடன் செல்லக் கூடியது.
எலக்ட்ரானிக் போர், வான் பாதுகாப்பு, தரை ஆதரவு மற்றும் ஆழ்ந்த தாக்குதல்கள் உள்ளிட்ட அதனுடைய பல திறன்களுடன் ரஃபேல் போர் விமானம் இந்திய விமானப் படைக்கு விமான வலிமையை அளிக்கிறது.
சீனாவின் ஜே 20 செங்டு ஜெட் விமானங்கள் ஐந்தாவது தலைமுறை போர் விமானங்கள் என அழைக்கப்படுகின்றன. 4.5 தலைமுறை ரஃபேலுடன் ஒப்பிடும்போது, ஜே 20 க்கு சரியான போர் அனுபவம் இல்லை. ரஃபேல் போர் விமானம் நிரூபிக்கப்பட்டாலும், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் மாலி ஆகிய நாடுகளில் அதன் பணிகளுக்கு பிரெஞ்சு விமானப்படையால் பயன்படுத்தப்பட்டது. இது மத்திய ஆபிரிக்க குடியரசு, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரஃபேல் ஜே 20 ஐ விட அதிக எரிபொருள் மற்றும் ஆயுதங்களையும் கொண்டு செல்ல முடியும்.
ஒவ்வொரு விமானத்திலும் ஆயுத 14 சேமிப்பு நிலையங்கள் உள்ளன. இந்த ஜெட் விமானங்கள் மிகவும் மேம்பட்ட வானில் இருந்து பாயும் ஏவுக்கணைகளுடன் வருகின்றன. 190 கிலோ எடையுள்ள இந்த ஏவுகணை 100 கி.மீ க்கும் அப்பால் உள்ள இலக்கை குறிவைத்து (பி.வி.ஆர்) மேக் 4 அதிவேகத்தில் செல்லக்கூடியது. பாகிஸ்தான் பயன்படுத்தும் எஃப் 16 ஜெட் விமானங்கள், வானிலிருந்து 75 கி.மீ தூரத்தில் இலக்கை குறிவைக்கும் (பி.வி.ஆர்) அம்ராம் ஏவுகணையை சுமந்து செல்கின்றன. போரில், ரஃபேல் போர் விமானம் எஃப்16-ஐ விட சிறப்பாக செயல்பட முடியும்.
ரஃபேல் போர் விமானங்கள் வானிலிருந்து நிலத்தை தாக்கும் (SCALP) ஏவுகணைகளுடன் வருகின்றன. அவை 300 கி.மீ தொலைவு இலக்கை கொண்டது. இது நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுக்கணை ஆகும்.
மேலும், ரஃபேல் போர் விமானத்தில் உள்ள (MICA) மைகா ஏவுக்கணை போரில், வானிலிருந்து குறுகிய தூரம் மற்றும் நீண்ட தொலைவு இலக்குகளை தாக்குதல் நடத்தும் ஒரு ஏவுக்கணை. கடைசி நிமிடத்தில், இந்தியா பிரெஞ்சு கூட்டு நிறுவனமான சஃப்ரான் தயாரித்த வானத்தில் இருந்து தரையில் துல்லியமாக தாக்குதல் நடத்தும் ஏவுகணையான ஹம்மர்-ஐக் HAMMER (Highly Agile and Manoeuvrable Munition Extended Range) கேட்டுள்ளது. இது பதுங்கு குழி வகை கடின இலக்குகளுக்கு எதிராக 70 கி.மீ அளவு தூரத்திற்கு பயன்படுத்தலாம்.
ரஃபேல் போர் விமானம் பற்றிய அடிப்படை விவரங்கள்:
விங் ஸ்பேன்: 10.90 மீட்டர்
நீளம்: 15.30 மீட்டர்
உயரம்: 5.30 மீட்டர்
விமானத்தின் ஒட்டுமொத்த காலி எடை: 10 டன்
வெளிப்புற சுமை: 9.5 டன்
அதிகபட்சமாக எடுத்துச்செல்லும் எடை: 24.5 டன்
எரிபொருள் (Internal): 4.7 டன்
எரிபொருள் (External): 6.7 டன் வரைக்கும்
எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டபின் அதிகபட்சம் பறக்கும் தூரம்: 3,700 கி.மீஅதிக வேகம்: வானத்தில் அதிக உயரத்தில் 1.8 மாக் வேகத்தில் செல்லக் கூடியது
தரையிறங்கும்போது செல்லும் வேகம்: 450 மீட்டர் (1,500 அடி)
ஏறும்போது முழு அளவில் இயங்கக்கூடிய உயரம் (Service ceiling): 50,000 அடி