ஞாயிறு, 26 ஜூலை, 2020

"நீட் தேர்வு திணிப்பை தமிழக அரசு தடுக்க வேண்டும்!" - கே.எஸ்.அழகிரி

மத்திய பாஜக அரசின் நீட் தேர்வு திணிப்பை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்திள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, நடப்பாண்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று, சட்ட வடிவம் பெறுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். 

மத்திய பாஜக அரசின் நீட் தேர்வு திணிப்பை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ள கே.எஸ்.அழகிரி, தமிழக அரசால் தடுக்க முடியவில்லை எனில், நீட் தேர்வை தடுக்க எத்தகைய போராட்ட வழி முறைகளை கையாள்வது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.