திங்கள், 27 ஜூலை, 2020

தேர்வு எழுதாத 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மறுவாய்ப்பு தேர்வு இன்று நடைபெறுகிறது!

தமிழ்நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக மார்ச 24ம் தேதி தேர்வு எழுதாத மாணவர்களுக்கு இன்று மறு வாய்ப்பு தேர்வு நடைபெறுகிறது.

 

12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெற்றது. மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வை, கொரோனா அச்சம் காரணமாக பலர் எழுதவில்லை. அவர்களுக்கான மறுவாய்ப்பு தேர்வு இன்று  நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 289 தேர்வு மையங்களில் நடைபெறும் தேர்வை, 743 மாணவர்கள் எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

 

சென்னையில் மட்டும் 20 தேர்வு மையங்களில் 101 மாணவர்கள் மறுவாய்ப்பு தேர்வை எழுத உள்ளனர். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வு எழுத உள்ள 743 பேரில் பெரும்பாலானவர்கள் தனித் தேர்வர்கள் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வுப் பணியில் அந்தந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதாகவும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Related Posts:

  • மூட்டுவலிக்குரிய மருத்துவக் குறிப்புக்கள்:- மருத்துவக் குறிப்புக்கள். கரட், பீட்ரூட் ஆகியவற்றை பச்சையாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். காய்கறிச் சூப் அசைவ சூப் அடிக்கடி சாப்ப… Read More
  • மாதவிலக்கு சீரா வெளியேற.....வைத்தியம் வருத்து பாக்கெட்டுல வச்சிருக்கிற தின்பண்டங்கள், எண்ணெய் பதார்த்தம், இனிப்பு வகை இவைகள நொருக்குத் தீனியா சாப்ப… Read More
  • உணவுமுறைகள் சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடி… Read More
  • மகப்பேறு தழும்புகளை குறைக்க கன்சீலர்மகப்பேறு தழும்புகளை உடனடியாக மறைக்க வேண்டும் என்றால் கன்சீலர் உபயோகிக்க வேண்டும். ஏனென்றால் கன்சீலர் சரும நிறத்தை விட ஒருபடி குறைவாக இருக்… Read More
  • சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! ! சர்க்கரை … Read More