திங்கள், 27 ஜூலை, 2020

ஜனநாயகத்தை பாதுகாக்க ராஜஸ்தான் சட்டப் பேரவையை கூட்ட வேண்டும்! - ப.சிதம்பரம்

Image

ஜனநாயகத்தை பாதுகாக்க ராஜஸ்தான் சட்டப் பேரவை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உட்பட 18 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால், அந்த மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.  

இந்நிலையில், இணைய வழியாக ராஜஸ்தான் மாநில அரசியலுக்காக உரத்த குரல் எழுப்புவோம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி இன்று முதல் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ராஜஸ்தான் மாநில அரசியல் நிலவரம் தொடர்பாக வீடியோ பதிவிட்டுள்ளார்.  

Image

அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை  குலைப்பது அரசியல் சாசனத்துக்கு புறம்பான ஒரு நடவடிக்கை என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில நண்பர்கள், தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கின்றனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார். 

எனவே, ஜனநாயகத்தை பாதுகாக்க ராஜஸ்தான் சட்டப் பேரவை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ஆளுநருக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.