வெள்ளி, 31 ஜூலை, 2020

அண்ணா சிலை அவமதிப்பு: மனநிலை பாதிக்கப்பட்டவரின் செயலால் பதற்றம்

Image

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே அண்ணா சிலை அமைந்துள்ள பீடத்தின் மீது காவி துணி போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருப்பர் கூட்டம் வெளியிட்ட கந்தசஷ்டிகவசம் குறித்த வீடியோ சர்ச்சையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை மீது காவிகொடி கட்டுவதும் காவி சாயம் பூசுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை பீடம் அருகே நேற்று நள்ளிரவு ஏதோ மர்ம நபர்கள் காவி கொடியை கட்டியதோடு சிலை மீது சில உபயோகம் அற்ற பொருட்களை வீசி சென்று உள்ளனர் .இன்று காலை இதை பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவே களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவற்றை அகற்றினர். 

இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மனோ தங்கராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் குழித்துறை பகுதியில் திரண்டனர் அவர்கள் எழுத்துப்பூர்வமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .ஏற்கனவே இந்த செயலியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர் .இதைத் தொடர்ந்து இந்த பகுதிக்கு வந்து திமுகவினர் போராட்டம் செய்யாமல் கலைந்து சென்றனர்.இந்த நிலையில் திருத்துவபுரம் பகுதியை சேர்ந்த மன நோயாளி தங்க ராஜ் என்பவரை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Posts:

  • என்னடா நாடு இது...? என்னடா நாடு இது...? மதுவினால் மரணத்தை நோக்கி செல்லும் மனித உயிர்களை மீட்க ஒருவர் 25-நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்,அவரை ஒரு ஆறுதலுக்கு கூ… Read More
  • பங்குவர்த்தகம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் பங்குவர்த்தகம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் அதற்கு முன் சில அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்  தனியார் நிறுவனம் என்றால் என்ன&nbs… Read More
  • Hadis முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைக் கண்டார்கள் என்று உங்களிடம் யார் அறிவிக்கின்றாரோ அவர் பொய் சொல்லி விட்டார். இறைவனோ "கண்கள் அவனைப் பார்க்காது' என… Read More
  • குளிர் காலங்களில் சளி பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி ஏற்பட்டு விடுகின்றது சிலருக்கு மருந்துகள் பாவிப்பதன் மூலமாகவும் குணமவடைவது இல்லை இந்த முறையை ந… Read More
  • Hadis நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான், "யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக… Read More