செவ்வாய், 28 ஜூலை, 2020

கொரோனா பரவலை முகக் கவசம் தடுக்கிறதா? சலோன் ஆய்வு சொல்வது என்ன?

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மக்களை தங்களை இந்த நோய்த்தொற்றிலிருந்து காத்துக்கொள்ள முக கவசங்கள் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில், மக்கள் நெருக்கடி மிக்க இடங்களில் தனிநபர் இடைவெளி கடைப்பிடிப்பது இயலாத காரியம் என்பதால், அங்கு முககவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில் உள்ள சலோனில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், Morbidity and Mortality Weekly Report (MMWR) வெளியிடப்பட்டுள்ளன.

முடிவுகள் தெரிவிப்பது என்ன?

அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில் உள்ள ஸ்பிரிங்பீல்ட் பகுதியில் உள்ள சலோனில், கொரோனா அறிகுறிகளுடன் பாதிப்பு கொண்ட சிகை வல்லுனர்கள் இருவர், 139 பேருக்கு சிகை அலங்காரம் செய்தனர். அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். வாடிக்கையாளர்களை சோதனை செய்துபார்த்ததில், 69 பேருக்கு கொரோனா நெகட்டிவ் என்று முடிவுகள் வந்திருந்தன. அவர்களுக்கு எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.
104 வாடிக்கையாளர்களிடையே எடுக்கப்பட்ட நேர்காணலில், 98.1 சதவீதம் பேர் (அதாவது 102 பேர்), முழுமையான நேரத்திலும் முககவசம் அணிந்திருந்ததாகவும், 1.9 சதவீதத்தினர் சிறிதுநேரமே முககவசம் அணிந்திருந்ததாக தெரிவித்தனர்.

139 வாடிக்கையாளர்களின் சராசரி வயது 52. அவர்கள் அந்த சலோனில் 15 முதல் 45 நிமிடங்கள் வரை இருந்துள்ளனர். இவர்களில் 47.1 சதவீதத்தினர் துணியால் ஆன முககவசத்தையும், 46.1 சதவீதத்தினர் சர்ஜிகலுக்கு பயன்படுத்தப்படும் முக கவசங்களையும், 4.8 சதவீதத்தினர் என்95 ரெஸ்பிரேட்டர்களையும், 1.9 சதவீதத்தினருக்கு எந்தவகை முககவசம் என் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவில் இருந்தனர்.
2020, மே 12ம் தேதி, சலோனில் பணியாற்றும் முதலாவது சிகை வல்லுனருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு 8ம் நாளில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல், இரண்டாவது சிகை வல்லுனருக்கு மே 15ம் தேதி சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு, 10 நாட்களுக்கு பிறகு கொரோனா உள்ளது கண்டறியப்பட்டது.

இந்த இரண்டு சிகை வல்லுனர்களும், 139 வாடிக்கையாளர்களுக்கு சிகை திருத்தம் செய்தநிலையில், அங்கு கொரோனா பரவல் கண்டறியப்பட்ட நிலையில், சலோன் 3 நாட்கள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டதுடன் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டது.

முககவசம் அணிவதால் பாதிப்பு தடுக்கப்படுகிறதா?

சிகை வல்லுனர்களும், வாடிக்கையாளர்களும் முககவசங்களை அணிந்திருந்ததனால், கொரோனா பாதிப்பு பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடங்களில், தனிநபர் இடைவெளி கடைப்பிடிப்பது இயலாத காரியம் என்பதால், பொதுஇடங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்பது நல்ல பலனை தந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தில் தெரிவித்திருந்தது. முக கவசம் அணிவது ஆரோக்கியமான மனிதர்களிடையே பாதிப்பை குறைப்பதாக இருப்பதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று துவங்கிய காலத்தில், முக கவசம் அணிவது பாதுகாப்பானதா என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், தொற்று தீவிரமான நிலையில், பாதிப்பு பரவலை முகக்கவசம் கட்டுப்படுத்துகிறது என்றும், துணியினால் ஆன முகக்கவசம் கூட அதிகளவில் பாதிப்பை கட்டுப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் அரிசோனா, ஹார்வார்டு, ஆஸ்திரேலியாவின் சிட்னி உள்ளிட்ட பல்கலைகழகங்கள், நியூயார்க் உள்ளிட்ட பெருநகரங்களில் நடத்திய ஆய்வுகளில், எப்போதும் புரொபசனல் முககவசங்களை தொடர்ந்து அணிவதன் மூலம், அந்த நகரத்திலிருந்தே, 70 சதவீதம் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும், விரைவில் பருவமழை துவங்க உள்ளதால் 3 அடுக்கு முக கவசங்களை அனைவரும் பயன்படுத்த அறிவுறுத்தியிருந்தது. இந்த 3 அடுக்கு முககவசங்களினால், உள் உறை, மழையினால் பாதிப்பு அடையாத வண்ணம் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.