மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக சட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும், அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகம்தான் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலில் இருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகையிலான 4 அவசரச் சட்டங்களை மத்திய அரசு இயற்றி உள்ளதாகவும், அதனை திரும்பப் பெறவும் வலியுறுத்தி சென்னையில் வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
அண்ணாநகரில் உள்ள இல்லம் முன்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் கருத்துகளை கேட்காமலேயே மத்திய அரசு யதேச்சதிகார சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டினார். இடஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளதாகவும், மிகச் சிறப்பான தீர்ப்பு எனவும் வைகோ தெரிவித்தார்.