வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

புதிய சுமை.. ஏடிஎம் கட்டணத்தை அதிகரித்த வங்கிகள்.. மக்களே உஷார்..!

 

ATM cash withdrawal limit in SBI, HDFC, PNB, ICICI, Axis
வங்கிகளில் ஏடிஎம் கட்டணம் மாற்றியமைப்பு

ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, பல வங்கிகளும் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. எந்தெந்த வங்கிகள் எவ்வளவு இலவசமாக பணம் எடுக்க அனுமதிக்கின்றன.

பல வங்கிகளும் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. மற்ற வங்கிகள் ஏடிஎம்களைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளன. அனைத்து வங்கிகளும் ஏடிஎம்களைப் பயன்படுத்துவதற்கு வரம்புகளை நிர்ணயித்துள்ளன.

கூடுதல் கட்டணங்கள் மற்றும் பிற விவரங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் பார்ப்போம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)

இந்தியாவின் முன்னணி வணிக வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐயில் மெட்ரோ பகுதிகள் தவிர, ஒரு பிராந்தியத்திற்கு ஏடிஎம் மூலம் ஐந்து முறை இலவச பணம் எடுக்கலாம். அதைத் தொடர்ந்து, எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு ரூ.5 கட்டணமும், எஸ்பிஐ அல்லாத ஏடிஎம்மில் பணம் எடுக்க ரூ.10 கட்டணமும் விதிக்கப்பட்டுள்ளது. தினசரி பரிவர்த்தனை வரம்பு குறைந்தபட்சமாக ரூ.100 ஆகவும், அதிகபட்சமாக ரூ.20,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), எஸ்பிஐ போன்று மெட்ரோ நகரங்களில் மூன்று இலவச ஏடிஎம்களில் பணம் எடுப்பதையும், மற்ற பிராந்தியங்களில் ஐந்து முறை ஏடிஎம்களில் பணம் எடுப்பதையும் அனுமதிக்கிறது. கூடுதலாக வங்கி ஏடிஎம் மூலம் பணம் எடுக்க ரூ.10 வசூலிக்கிறது. வங்கியின் தினசரி பணம் எடுக்கும் உச்சப்பட்ச வரம்புகள் கிளாசிக் கார்டுதாரர்களுக்கு ரூ.25,000 முதல் தங்கம் மற்றும் பிளாட்டினம் கார்டுதாரர்களுக்கு ரூ.50,000 வரை இருக்கும்.

HDFC வங்கி

இந்தியாவில் HDFC வங்கி முக்கிய நகரங்களில் மூன்று இலவச பரிவர்த்தனைகளையும் ஒட்டுமொத்தமாக ஐந்து இலவச பரிவர்த்தனைகளையும் வழங்குகிறது. பயன்படுத்தப்படும் அட்டையின் வகையைப் பொறுத்து பணம் எடுக்கும் வரம்பு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை இருக்கும். மேலும், வெளிநாட்டு ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு வங்கி ரூ.125 கட்டணமாக வசூலிக்கிறது.

ஐசிஐசிஐ (ICICI) வங்கி

ஐசிஐசிஐ வங்கி மற்ற வங்கிகளைப் போலவே 3 மற்றும் 5 இலவச பரிவர்த்தனை ஃபார்முலாவைப் பயன்படுத்துகிறது. ஓவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் கூடுதலாக ரூ.21 செலுத்த வேண்டும். ICICI ஆல் இயக்கப்படாத ATM ஐப் பயன்படுத்தும் போது, பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ. 1,000க்கு ரூ. 5 அல்லது ரூ. 25,000க்கு மேல் உள்ள தொகைகளுக்கு ரூ.150, எது பெரியதோ அதுவாகும். ஏடிஎம்மில் ஒரு நாளைக்கு 50,000 வரம்பு உள்ளது.

ஆக்ஸிஸ் வங்கி


முதல் மூன்று முதல் 5 வரை இடத்துக்கு ஏற்ப இலவசமாக பணம் எடுக்கும் சேவையை அனுமதிக்கிறது. இதர சேவைகளுக்கு கட்டணமாக ரூ.21 வசூலிக்கப்படும். ஒரு நாளைக்கு ஏடிஎம் மூலம் ரூ.40 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ளலாம்.

source https://tamil.indianexpress.com/business/check-atm-transaction-charges-free-withdrawal-limit-and-other-details-496495/