வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

பயமற்று நிம்மதியாக வாழ எனது உரிமையை மீட்டு தாருங்கள்” : மனம் திறக்கும் பில்கிஸ் பானு

 


18 8 2022 

“உணர்வற்று இருக்கிறேன், பயமற்று நிம்மதியாக வாழ எனது உரிமையை மீட்டு தாருங்கள்” என்று பில்கிஸ் பானு கூறியுள்ளார்.

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு ஆகஸ்டு 15ம் தேதி விடுவித்தது. இந்த செயலை அரசியல் செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தனது அமைதியை உடைத்து பேசியிருக்கிறார் பில்கிஸ் பானு . அவரது வழக்கறிஞர் ஷோபா குப்தா வெளியிட்ட அறிக்கையில் “ இதுபோல்தான் ஒரு பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்கு முடிவுக்கு வர வேண்டுமா ? நான் எனது மன கசப்புகளில் வாழப் பழக தொடங்கியிருந்தேன். 11 பேரின் விடுதலை எனது நிம்மதியை சிதைத்துவிட்டது. நீதியின் மீது உள்ள நம்பிக்கையை இழக்க செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள தஹூத் என்ற மாவட்டத்தில் உள்ள ஷின்ங்வத் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பில்கிஸ். பில்கிஸ் பானுவை வல்லுறவு செய்த 11 குற்றாவாளிகளும்  விடுதலையான பின்பு அங்கு ஒரு பயம்  கலந்த அமைதி நிலவுகிறது.

பில்கிஸ் மற்றும் அவரது கணவர் யாகுப் ரசூல் அங்கு வாழ்ந்து வந்தனர். அவர்கள் வாழந்து வீட்டிலிருந்து 20 மீட்டர் தொலைவில்தான் ராதேஷையம் ஷா ( வயது (47 ) 11 குற்றவாளிகளில் ஒருவர் வீடு இருக்கிறது.

இந்நிலையில் பில்கிஸ் குடும்பத்தினர்  தீவக் பரியா என்ற கிராமத்திற்கு சென்றுவிட்டனர். இது பில்கிஸ் வாழந்த பழைய வீட்டிலிருந்து 33 கிமீ தொலைவில் உள்ளது. அவரது பழைய வீடு தற்போது, ஒரு துணிக்கடையாக இருக்கிறது. அதை ராஜஸ்தானிலிருந்து வந்த இந்து குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு காலத்தில் அங்குதான் பில்கிஸ் பானுவின் தந்தை எருமைகளை வைத்து பால் விநியோகம் செய்தார். இப்போது அந்த வியாபாரம் நடந்த தடையமே அங்கு இல்லை.  ஒரு குடும்பம் மட்டுமே சில மாடுகளை வீட்டின் முன்பு கட்டியுள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்த பின்னர் பில்கிஸ் பானு மற்றும் அவரது குடும்பத்தினர் பிப்ரவரி 28, 2002ம் ஆண்டு வீட்டை விட்டு சென்றனர். மார்ச் 3, 2002ம் தேதி அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொலை செய்யபடுகின்றனர். இதில் 6 பேரின் உடல் இன்றும் கிடைக்கவில்லை. ஜனவரி 21, 2008ம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவரை பாலியல் வன்கொடுமை செய்த 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.

பில்கிஸ் பானுவின் பழைய வீட்டிற்கு அருகில்தான் 11 குற்றவாளிகளின் வீடுகளும் அமைந்துள்ளது.

குற்றாவாளிகளில் ஒருவரான ராதேஷ்யாம் ஷா, சிறை வாழ்க்கையில் அவர் பயின்ற பல்வேறு பயிற்சிகளை எடுத்துகூறுகிறார். ஒழுங்கம் மற்றும் கடவுள் நம்பிக்கை மற்றும் கம்யூட்டர் கோர்ஸ், இந்தி இலக்கியங்கள் பற்றி கற்றதாக கூறுகிறார். கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் கைதான கைதிகளுக்கு இவர் ஜாமின் மனு எழுத உதவி செய்ததாக கூறுகிறார். மேலும் 2008 குண்டு வெடிப்பில் குற்றவாளியான சவ்தர் நகோரியுடன்  சிறையில் இருந்ததாகவும், எல்லா குற்றவாளிகளும் ஒரேமாதிரிதான் என்றும் அவர் கூறுகிறார்.

குற்றம் சுமத்தபட்ட   ராதேஷ்யாம் ஷா மற்றும் ரமேஷ் சந்தனா இருவரும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் தாங்கள் இஸ்லாமியர்களுக்கு உதவத்தான் செய்தோம் என்றும் நீங்கள் வேண்டுமானால் கிரமத்தில் இருப்பவர்களிடம் கேட்டுபாருங்கள் என்று கூறுகினறனர். இந்த வழக்கில் சில சகோதர்களும் குற்றாவாளிகள் என்று ஆடையாளம் காணபட்டனர்.  ஜஸ்வந்த் மற்றும் கோவிந்த் நய் மற்றும்  சிலேஷ் பட் மற்றும் மித்தேஷ் பட் ஆகியோர் சகோதர்கள். நரேஷ் மோதியா மற்றும் பிரதீப் மோதியாவும் சகோதரர்கள். இதுபோன்ற ஒரு செயலை சகோதரர்கள் இணைந்து செய்வார்களா என்ற கேள்வியை அவர்கள் கேட்கின்றனர்.

source https://tamil.indianexpress.com/india/bilkis-bano-says-give-back-right-to-live-without-fear-496086/