திங்கள், 15 ஆகஸ்ட், 2022

சுதந்திர தினக் கொண்டாட்டத்தை நாடகமாக பார்க்கிறது

 

சுதந்திர தின கொண்டாடத்தை பா.ஜ.க.வின் நாடகமாக பார்ப்பதாகவும், 8 ஆண்டுகள் அவர்கள் செய்த கொடுமைகளை மறைப்பதற்கே இந்த சுதந்திர தின விழா கொண்டாடத்தை நடத்தி தேச பற்றாளர்கள் போல் காட்டி கொள்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பாண்லே ஓட்டுநர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் நாம் தமிழர்
தொழிற்சங்கத்தின் பெயர் பலகையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்து, கட்சி கொடியை ஏற்றினார். குருமாம்பட் பகுதியில் உள்ள பாண்லே தொழிற்சாலை வாயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சி மாநில செயலாளர் சிவக்குமார், தொழிற்சங்க தலைவர் தமிழ்ச்செல்வன், செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மதுரையில் அமைச்சர் வாகனத்தில் பா.ஜ.கவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல். நேர்மையாக இயங்க வேண்டும் என நினைப்பவர் பி.டி.ஆர். இது ஒரு கொடுமையான செயல். இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார். பா.ஜ.க வட இந்தியா வில் செய்வது போல் தற்போது இங்கேயும் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.


பா.ஜ.க ஆளுநர்கள் அதிகார எல்லையை மீறி செயல்படுவதாகவும், பாஜக வந்த பிறகு ஆளுநர்கள் உளவு நிறுவனமாக செயல்பட்டு மத்திய அரசுக்கு தகவல் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சீமான், சுதந்திர தின கொண்டாடத்தை பா.ஜ.கவின் நாடகமாக பார்ப்பதாகவும், 8 ஆண்டுகள் அவர்கள் செய்த கொடுமைகளை மறைப்பதற்க்கே இந்த சுதந்திர தின விழா கொண்டாடத்தை நடத்தி தேச பற்றாளர்கள் போல் காட்டி கொள்வதாகவும் தெரிவித்தார்.

source https://news7tamil.live/bjp-sees-independence-day-celebrations-as-drama-seeman-speech.html