பெங்களூருவில் தமிழகத்தைச் சேர்ந்த 40 தனியார் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக நீர் விடுவிக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பெங்களூருவில் வன்முறை வெடித்துள்ளது.
தமிழர்கள் நடத்தும் கடைகளிலும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீதும் கல் வீச்சு, தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.இதைக் கட்டுப்படுத்த அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூருவில் தமிழகத்தைச் சேர்ந்த 40 தனியார் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நைஸ் சாலையில் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
பதிவு செய்த நாள் : September 12, 2016 - 06:58