செவ்வாய், 14 நவம்பர், 2017

பள்ளியில் தமிழில் பேசியதற்காக 100 ரூபாய் அபராதம்..! November 14, 2017

Image

கோவை அருகே தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழில் பேசியதற்காக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக 9-ம் வகுப்பு மாணவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். 

கோவை போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் மகாலட்சுமி என்பவர் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். 

இவர் பள்ளியில் தமிழில் பேசியதற்காக பள்ளி நிர்வாகம் 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இது குறித்து மகாலட்சுமி தனது தந்தையுடன் வந்து ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். 

அதில் தான் தமிழில் பேசியதற்காக பள்ளி நிர்வாகம் தமக்கு 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும், அதுமட்டுமின்றி பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். எனவே பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவி மகாலட்சுமி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Posts: