
நாடு முழுவதும் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை 40 இடங்களில் நிறைவு பெற்றுள்ளதாக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சசிகலா உறவினர் வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், தற்காலிக நிறுத்தப்பட்ட இடங்களில் மீண்டும் சோதனை தொடர்வதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சசிகலா மற்றும் தினகரனுக்கு தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய வருமானவரி சோதனை நாடு முழுவதும் 187 இடங்களில் நடைப்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று இரவு வரை நடைப்பெற்ற வருமானவரி சோதனை தற்காலிகமாக பல இடங்களில் நிறுத்தப்பட்டது அதனை தொடர்ந்து இன்று காலை மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனைகளை தொடங்கினர். அப்பொழுது 187 இடங்களில் நடைப்பெற்ற சோதனையில் 40 இடங்களில் சோதனை நிறைவுற்றதாக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இயக்குநர் தெரிவித்தார்.